சனி, 12 ஜனவரி, 2013

சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 2)

பதிவர்கள் செய்யும் சில அடிப்படை தவறுகளை பற்றி பார்த்து கொண்டிருக்கும் இந்த தொடரில் நாம் பார்க்க இருப்பது தள வடிவமைப்பை பற்றி. பதிவர்களே உங்கள் பிளாக் முழுவதும் விட்ஜெட்டுக்களாக நிரப்பி உங்கள் பிளாக்கை குப்பை கூடை போல வைத்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு நேரமும் உங்கள் பிளாக் திறக்க வெகு நேரம் ஆகிறதா? டெம்ப்ளேட் தேர்வு செய்வதில் குழப்பமாக உள்ளதா? இந்த கேள்விகளுக்கான பதில் ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. முந்தைய பாகத்திற்கு செல்ல சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 1) இந்த லிங்கில் செல்லுங்கள்.
தளத்தை வடிவமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

டெம்ப்ளேட் தேர்வு செய்தல்:
பிளாக்கர் வலைப்பூக்களுக்கு ஆயிரமாயிரம் இலவச டெம்ப்ளேட்கள் உள்ளன. ஆனால் டெம்ப்ளேட்டை தேர்வு செய்யும் பொழுது பின்புறத்தில் புகைப்படம் ஏதும் இல்லாமல் முற்றிலும் வெண்மை நிற டெம்ப்ளேட்கள் தேர்வு செய்வது நல்லது. பெரும்பாலான வாசகர்களும் வெண்மை நிறத்தையே விரும்புகின்றனர். வெண்மை நிறத்தை தேர்வு செய்வதால் வாசகர்களுக்கு எழுத்துக்கள் படிப்பதில் உள்ள சிரமங்களை(கண்கள் கூசுவது) தவிர்க்கலாம். மற்றும் வலைப்பூவும் வேகமாக திறக்க இந்த வகை டெம்ப்ளேட்கள் உதவுகின்றன. டெம்ப்ளேட் அழகை பார்க்காமல் பல்வேறு வசதிகள் உள்ளதா என்பதை மட்டும் பார்த்து டெம்ப்ளேட் தேர்வு செய்யவேண்டும்.


விட்ஜெட்கள் பொருத்துதல்:
பதிவுலகில் நான், பொன்மலர், பலே பிரபு, வைரை சதீஷ் போன்ற மேலும் பல நண்பர்களும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவு எழுதுகின்றனர். நாங்கள் படித்ததையோ அல்லது தெரிந்ததையோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒரே விட்ஜெட்டை பலரும் வெவ்வேறு வடிவங்களில் பதிவாக போடுவோம். ஆனால் உங்கள் வலைப்பூவிற்கு எந்த விட்ஜெட் பொருத்தமாக இருக்கும், எந்த விட்ஜெட் இணைத்தால் வாசகர்கள் பயன்பெறுவார்கள் என்பதை உறுதி செய்து அதில் உங்களுக்கு தேவையான ஒரு விட்ஜெட்டை மட்டும் வலைப்பூவில் சேர்க்க வேண்டும்.

அனைத்து விட்ஜெட்டுக்களையும் உங்கள் வலைப்பூவில் சேர்த்தால் உங்கள் பிளாக் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதால் பிளாக் வரும் வாசகர்கள் கடுப்பாகி திரும்பி சென்று விடுவார்கள். முடிந்த அளவு பிளாக்கர் தளத்தின் Default விட்ஜெட்டுக்களை மட்டுமே வைத்து கொள்வது நல்லது. அவசியமில்லாமல் மூன்றாம் தள விட்ஜெட்டுக்களை சேர்க்க வேண்டாம்.


அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்:
ஒரு சிலர் தங்கள் பிளாக் அழகாக இருக்க வேண்டும் என நினைத்து பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை வலைப்பூவில் இணைத்து கொள்வார்கள். உதாரணமாக ஒன்றுக்கும் அதிகமான Visitor Counters, பனி கொட்டுவது போன்று, மவுஸ் முனையை மாற்றுவது. உண்மையை சொல்லப்போனால் இந்த விட்ஜெட்டுக்களால் 1% நன்மை கூட உங்கள் வலைப்பூவிற்கு இல்லை. உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் யாரும் உங்கள் பிளாக்கின் அழகை வைத்து வருவதில்லை உங்கள் பிளாக்கின் பதிவுகளுக்காக தான் வருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். மாறாக ஒரு சிலருக்கு இவைகள் வெறுப்பாக தான் சென்று முடியும்.

அதற்க்காக அழகாகவே இருக்க கூடாதான்னு கேட்கிறீங்களா? அழகாக இருக்க கூடாதுன்னு நான் சொல்லவே இல்லையே. 95% வாசகர்களுக்கும் 5% அழகுக்கும் முக்கியத்துவம் கொடுங்கன்னு தான் சொல்றேன்.

பிளாக்கில் இருக்க வேண்டிய முக்கியமான விட்ஜெட்டுகள் என்ன:
குறிப்பிட்ட சில விட்ஜெட்டுக்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அவை என்னனென விட்ஜெட்டுகள் என்பதை கீழே பாருங்கள்.
1. Popular Post Widget
2. Email subscription Widget
3. Social Networking Sites Widget
4. Follower Widget
5. Blog Archive Widget
6. Search Box Widget

இந்த 6 விட்ஜெட்டுகள் கண்டிப்பாக உங்கள் பிளாக்கில் இருக்க வேண்டும். மற்றும் இதனோடு இந்த விட்ஜெட்டை சேர்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கும் மற்ற விட்ஜெட்டுகளையும் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்கவில்லையா?

பதிவு எழுதும் அனைவரும் விரும்புவது நம் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காதா என்று நம் எத்தனை முறை கோரிக்கை அனுப்பினாலும் தமிழ் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. உங்கள் பிளாக் மிக அதிக அளவிலான ஹிட்ஸ் பெற்று இருந்தால் மட்டுமே உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ்விளம்பரம் கிடைக்கும் அது மட்டுமல்லாது இன்னும் ஏராளமான கோட்பாடுகள் உள்ளன.

இப்படி கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காமல் கவலை படுகிறீர்களா தங்களுக்காக ஒரு சிறந்த விளம்பர தளத்தை அறிமுக படுத்தி வைக்கிறேன்.
  1. இதில் கூகுள் அட்சென்ஸ் போன்று நிறைய கோட்பாடுகள் இல்லை குறிப்பாக மொழியை வைத்து எந்த தளத்தையும் நிராகரிப்பதில்லை.
  2. குறைந்தது 10$ வருவாய் வந்தவுடன் நமது வங்கி கணக்கில் BANK TRANSFER செய்து விடுவார்கள்.
  3. 90% கோரிக்கைகளை நிராகரிப்பதில்லை அனைத்தையும் ஏற்று கொள்கிறார்கள்.
  4. APPROVED செய்த அடுத்த வினாடியே நாம் விளம்பரங்களை நம் தளத்தில் போட்டு கொள்ளலாம்.
  5. குறிப்பாக இந்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது.
இணையும் முறை :
  • இந்த தளத்தின் விளம்பரங்கள் உங்களுக்கு கிடைக்க கீழே உள்ள பேனர்(படத்தின் மீது) க்ளிக் செய்யுங்கள்.(இந்த பேனர் மூலம் இணைந்தால் சிறு கமிசன் தொகை எனக்கு தருவார்கள் ஆனால் உங்கள் வருவாயில் எவ்வித இழப்பும் ஏற்படாது).


மேலே உள்ள படத்தின் மீது செய்யவும்
  • இது நேராக உங்களை இந்த தளத்திற்கு கொண்டு செல்லும். அங்கு சென்றவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Publishers பகுதியில் உள்ள Register என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அந்த படிவத்தில் உள்ள கட்டங்களில் உங்களின் சரியான விவரங்களை பூர்த்தி செய்து கீழே உள்ள Register என்ற பட்டனை அழுத்துங்கள்.
  • சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Preferred Payment Mode என்பதில் Bank Pay என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் அந்த படத்தில் உள்ள எங்களை சரியாக பொருத்தி கீழே உள்ள Register என்ற பட்டனை அழுத்தவும்.

  • பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும் அதை அவர்கள் பரிசிலித்து அதிக பட்சம் 2 நாட்களுக்குள் மெயில் அனுப்பி விடுவார்கள்.
  • உங்கள் கோரிக்கை ஏற்க்கப்பட்டால் உங்களுக்கு கீழே இருப்பதை போல மெயில் வரும் இதில் உள்ள Click here to login என்ற லிங்கை க்ளிக் செய்து உங்கள் User name, Password கொடுத்து உள்ளே நுழையவும்.

பிளாக்கில் விளம்பரம் வெளியிடும் முறை :
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள Ad Display Code என்பதை க்ளிக் செய்து Create New Desktop Ad Unit என்பதை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் உங்கள் பிளாக் வசதிக்கு ஏற்ப தேவையான அளவில் பேனர் தேர்வு செய்து கீழே உள்ள Generate HTML Code என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் தேவைபட்டால் மாற்றங்கள் செய்து கொண்டு Update Preview code கொடுக்கவும்.
  • இப்பொழுது கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து DESIGN- ADD A GADGET - HTML JAVASCRIPT - சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
  • நீங்கள் பேஸ்ட் செய்த கோடிங்கை சேமித்து உங்கள் பிளாக் திறந்து பாருங்கள் உங்கள் தளத்தில் விளம்பர பேனர் வந்திருக்கும். இனி வாசகர்கள் இந்த பேனர் மீது க்ளிக் செய்தாலே போதும் உங்களுக்கான வருவாய் ஏறிக்கொண்டே இருக்கும்.
  • குறைந்தது 10$ சம்பாதித்தால் தான் உங்களால் அந்த பணத்தை பெற முடியும்.
  • இதில் உள்ள REFERAL வசதியின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிவிக்கலாம். இதன் மூலமும் உங்கள் வருவாய் பெருகும்.

இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்

நாம் நேற்று இணையத்தில் பிளாக்கர் மூலம் சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய பிளாக்கருக்கு இணையத்தில் கிடைக்கும் விளம்பரங்கள் மூன்று முறைகளில் செயல் படுகிறது அவையாவன
விளம்பரங்கள் செயல் படும் முறைகள்
  1. Pay per Click - இந்த வகை விளம்பரங்கள் ஒரு கிளிக் செய்தால் இவ்வளவு தொகை என்று பிரித்து அதன் அடிப்படையில் செயல்படும்.
  2. Page per Impression - இந்த வகை ஒவ்வொரு முறையும் நம் தளத்தில் விளம்பரங்கள் லோடு ஆகி வரும் எண்ணிக்கை வைத்து செயல்படும். நம் கணினியின் IP எண்ணை வைத்து கணக்கிடபடுகிறது.
  3. Pay per Action - இந்த வகை விளம்பரங்கள் நம் தளத்தில் வாசகர்கள் கிளிக் செய்து அந்த குறிப்பிட்ட பொருளை வாங்கினால் மட்டுமே நமக்கு வருவாய் வரும்.
Contexual Ads
நம்முடைய பிளாக்கருக்கு வரும் விளம்பரங்களில் அதிக பிரபலமானதும் அதிக வருவாய் ஈட்டி தருவதும் இந்த வகை விளம்பரங்கள் தான். நம் வாசகர்கள் செய்யும் ஒவ்வொரு கிளிக்கிற்கும் குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து வழங்குவார்கள். பெரும்பாலும் இந்த வகை விளம்பரங்கள் pay per click வகையை சேர்ந்தது.
சிறந்தவை : Google Adsense, Kontera

In-Text Advertising Programs :
நீங்கள் கூட இணையத்தில் பார்த்திருப்பீர்கள் ஏதேனும் எழுத்தின் மீது நம் மவுசின் கர்சரை வைத்தால் அதிலிருந்து ஒரு விளம்பரம் தோன்றும். இந்த வகை விளம்பர்கன் TEXT LINK ADS எனப்படும். இந்த விளம்பரங்களுக்கு நாம் தனியாக நம் பிலாக்கரில் இடம் ஒதுக்க தேவையில்லை நம் பதிவில் உள்ள எழுத்தில் லிங்க் கொடுத்தாலே போதும் என்பது இதன் தனி சிறப்பு. பிளாக்கில் இணைக்க இணையத்தில் உள்ள விளம்பரங்களை பற்றி
சிறந்தவை: Info links இந்த தளம் சென்று உங்கள் பிளாக்கர் முகவரி மற்றும் உங்கள் விவரங்களை அவர்களுக்கு அனுப்பவும்.


Affiliate Ads
நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் நம் தளத்தில் உள்ள விளம்பர லிங்க் மீது கிளிக் செய்து அந்த பொருளை வாங்கினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையை நமக்கு வழங்குவார்கள் இந்த வகை விளம்பரங்கள் Affiliate Ads எனப்படும். இது போல விளம்பரங்களை நம் பிளாக்கிற்கு பெறுவது மிகவும் சுலபம்.
(சிறந்தவை) ebay Affiliate , Amazon Affiliate
Sponsor Reviews
இது சற்று வித்தியாசமான முறை ஆகும். சில நிறுவனங்கள் நம்மை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் நிறுவனத்தை பற்றியோ அல்லது தயாரிக்கும் பொருட்களை பற்றியோ அல்லது அவர்களின் இணையதளத்தை பற்றியோ உயர்த்தி பதிவு எழுத பணம் தருவாகள்.
விளம்பரங்கள் பெற : pay per post தளத்திற்கு சென்று பெறவும்.


நீங்கள் எந்த விளம்பரதாரர்களின் தளத்திற்கு சென்றாலும் அனைத்து தளத்திற்கும் அடிப்படை தேவை உங்களுடைய தளத்தின் Rank அதனால் கீழே உள்ள சில முக்கியமான டிப்ஸ் கொடுத்துள்ளேன். அதனை கடைபிடித்தால் நிச்சயமாக நம் பிளாக்கை பிரபல மாக்கி அதன் மூலம் நம் வருவாயை பெருக்கி கொள்ள முடியும்.


பிளாக்கை பிரபலமாக்குவது எப்படி :-
  • நம் பிளாக்கில் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு பயன் தரும் விஷயத்தையோ அல்லது சுவாரஸ்யமான விஷயத்தையோ எழுத வேண்டும்.
  • நம் பதிவின் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் மிக கவனம் செலுத்தவேண்டும் . ஏனென்றால் தலைப்பை வைத்து தான் வாசகர்கள் நம் தளத்திற்கு வருவார்கள் மற்றும் பதிவிற்கு ஏற்ற தலைப்பை தேர்ந்தெடுக்கவும்.
  • ADULDTS ONLY பதிவுகளை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் நம் வாசகர்கள் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது.
  • நம் பிளாக்கின் URL கூகுள், யாகு, பிங் போன்ற தேடியந்திங்களில் சேர்க்கவும். இது மிகவும் முக்கியமான ஒன்று. இதன் மூலம் நாம் அதிக அளவு புதிய வாசகர்களை பெற வாய்ப்புள்ளது.
  • பதிவு எழுதும் போது பதிவின் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தவும், வாசகர்களை கவரக் கூடியதாகவும் அதே சமயம் பதிவிற்கு சம்பந்தமாகவும் தேர்வு செய்ய வேண்டும்.
  • நம் பிளாக்கில் எவ்வளவு வாசகர்கள் வருகிறார்கள் என்பதைவிட எவ்வளவு நேரம் ஒவ்வொரு பக்கமும் பார்வையிடப்படுகிறது என்பதை வைத்தே ALEXA RANK மதிப்பிட படுகிறது. ஆகவே நம் பிளாக்கை வாசகர்களை கவரும் விதத்தில் அழகாக மாற்றி கொள்ளுங்கள்.
  • உங்கள் பதிவில் படத்தினை சேர்த்தால் கண்டிப்பாக அந்த பதிவிற்கு ஏற்ற தலைப்பை கொடுக்கவும். ஏனென்றால் Google Images போன்ற தேடியந்திரகளில் தேடும் போது தலைப்பை வைத்தே படங்கள் தேர்வு பக்கத்தில் வரும்.
  • உங்கள் பிளாக்கிற்கு ஏற்ற keyword செலக்ட் செய்து உங்கள் டெம்ப்ளேட்டில் meta tag சேர்த்து விடவும்.
  • உங்கள் பிரௌசரில் Alexa Rank toolbar சேர்க்கவும். நிச்சயமாக இதன் மூலம் நம் பிளாக்கின் ரேங்க் உயர வாய்ப்புள்ளது.
  • முக்கியமான விஷயம் தவறாமல் பதிவு போடவும் அதாவது அடிக்கடி பதிவு போடுவது என்று அர்த்தமல்ல தினமும் ஒரு பதிவு போட்டால் தினமும் ஒரு பதிவு போடவும். அல்ல வாரம் ஒருமுறை போட்டால் தவறாமல் அந்த நாளில் போட்டு விடவும்.
இந்த குறிப்புகளை கண்டிப்பாக நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக உங்கள் பதிவை பிரபல மாக்கலாம். பின்பு விளம்பரங்களையும் பெறலாம்.

பிளாக்கர் மூலம் சம்பாதிக்க (Make Money Online) 100+ இணையதளங்கள்

 
பதிவு.

எழுதும் அனைவரும் தங்கள் பிளாக்கர் பிரபலமாகவேண்டும் என்று நினைப்பது உண்டு. அப்படி நம் பிளாக்கர் பிரபலம் ஆகும் போது நம்முடைய பிளாக்கை வைத்தே நாம் பெரியளவு பணத்தையும் சம்பாதிக்க வழி உள்ளது. இங்கு கீழே பிளாக்கர் மூலம் சம்பாதிக்க (Make Money Online) 100+ இணையதளங்கள் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன். தாங்கள் அந்த தாங்கள் இந்த தளங்களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கவும் வழி உள்ளது.
Advertising Programs


Selling Text Link Ads




In-Text Advertising Programs



RSS Feed Ads




Pop-ups and Pop-unders



Selling Direct Ads




இந்த இணையதளங்களில் நீங்கள் உங்கள் பிளாக்கினை சேர்த்து அக்கௌன்ட் ஓபன் சிது கொண்டு உங்கள் மாத வருமானத்தை பெருக்கி கொள்வோம்.

டுடே லொள்ளு
Photobucket
அய்யா இனிமே நானும் என் தளத்துல advertise ment போட்டு கொள்வேன்.
பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான வாக்கினை போட மறக்கவேண்டாம்

குறிப்பு: இந்த தளங்களை வைத்து நாம் எப்படி சம்பாதிப்பது என்று அடுத்த பதிவில் தெளிவாக இடுகிறேன்.

தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெயிலுக்கே வரும்

இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.

அதெல்லாம் சரிப்பா நாங்களே சும்மா பொழுது போக்குக்கு கணினிய உபயோகிக்கிறோம் அதுக்கு நாங்க மென்பொருளை காசு கொடுத்து ஏன் வாங்க வேண்டும் யாராவது அந்த மென்பொருட்களை சுமா கொடுத்தா சொல்லுப்பா நாங்க டவுன்லோட் பண்ணிக்கிறோம் என நீங்கள் கூறினால் உங்களை போன்றவர்களுக்கு ஒரு உபயோகமான தளம் உள்ளது. இந்த தளம் மென்பொருட்களை உங்கள் மெயிலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்காக.

  • இந்த தளத்தில் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக அறிமுக படுத்துவார்கள்.
  • அந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள் அதற்குள் அந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
  • 24 மணி நேரம் கழித்து டவுன்லோட் செய்தால் அந்த மென்பொருளை இலவசமாக பெற முடியாது காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக முந்தி கொள்வதே நல்லது.
  • இந்த தளத்தில் நாம் உறுப்பினர் நம் ஈமெயிலை கொடுத்து பதிந்து விட்டால் அந்த நாளுக்கான இலவச மென்பொருளை பற்றி நமது ஈமெயிலுக்கே அனுப்பி விடுவார்கள் அந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இன்றைய இலவச மென்பொருள்
  • டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் கொடுக்கப்படும் ஆக்டிவேசன் கீயை மறக்காமல் காப்பி செய்து மென்பொருளை register செய்து கொண்டால் தான் காலம் முழுவதும் இலவசமாக மென்பொருளை உபயோகிக்க முடியும்.
  • ஆனால் இந்த முறையில் உள்ள ஒரு குறை நாம் மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் அந்த பதிப்பில் இருந்து புதிய பதிப்பை அப்டேட் செய்ய முடியாது. அப்டேட் செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ஆகவேண்டும்.
  • இந்த தளத்தில் சைட்பாரில் உள்ள விட்ஜெட்டில் subscribe by Email என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் ஈமெயிலை கொடுத்து பதிந்து கொண்டால் உங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.
இந்த பயனுள்ள தளத்திற்கு செல்ல - www.giveawayoftheday.com

இதை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் அவர்களும் பயனடையட்டும்.

பணம் சம்பாதிக்க 12 வழிகள்

Post by சிவா on Thu Feb 19, 2009 1:50 am



வீட்டை விட்டு வெளியே வேலைக்குப் போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களா நீங்கள்?

உங்கள் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. ஆனால் அவை உங்களுக்கே தெரிவதில்லை என்பது தான் உண்மை. கீழ்க்கண்ட விஷயங்களில் உங்களுக்கு ஆர்வமும், திறமையும் இருந்தால் உட்கார்ந்த இடத்திலேயே கை நிறைய சம்பாதிக்கலாம்.

* உங்களுக்கு தையல் வேலையோ, எம்பிராய்டரிங்கோ தெரியுமா? பொம்மை செய்வது, ஓவியங்கள் வரைவது, கைவினைப் பொருட்கள் செய்வது என்று ஏதேனும் தெரியுமா? அதையே மூலதனமாக வைத்து நீங்கள் ஏதேனும் சம்பாதிக்கலாம். உங்களுக்குத் தெரிந்த வர்களிடம் உங்கள் கைவினைத் திறமை களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் செய்தவற்றை அவர்களுக்கு மாதிரிக்குக் காட்டுங்கள். கொஞ்ச நாட் களில் அவற்றை மலிவு விலைக்கு விற்றுப் பாருங்கள். பிறகு அப்படியே வியாபாரத்தைப் பெருக்கலாம்.

* உங்களுக்கு டைப் ரைட்டிங் தெரியுமா? கம்ப்யூட்டர் ஆபரேட் செய்யத் தெரியுமா? அப்படியானால் உங்களுக்குத் தெரிந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு டைப் ரைட்டிங் வேலைகளைச் செய்து கொடுங்கள்.

* நீங்கள் வீட்டு விலங்குப் பிரியரா? அப்படியானால் கொஞ்சம் இட வசதிக்கு ஏற்பாடு செய்து விட்டு வளர்ப்புப் பிராணிகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்தலாம். அதில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுச் செல்லப் பிராணிகளை, அவர்கள் ஊருக்குச் செல்லும்போதும், மற்ற தேவையான சந்தர்ப்பங்களிலும் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கலாம்.

* மெஹந்தி வரைவதில் நீங்கள் கில்லாடியா? உங்கள் வீட்டு வாசலில் ஒரு போர்டு வைத்து விடுங்கள். கல்யாணம் மற்றும் விசேஷங்களுக்கு மெஹந்தி டிசைன் போட்டு விடலாம். வீட்டிலேயே அதற்கான வகுப்பையும் எடுக்கலாம்.

* சாக்லேட், கேக், பிஸ்கட் போன்ற வற்றைத் தயாரிப்பதில் நீங்கள் நிபுணியா? பண்டிகை நாட்களுக்கு, பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு என ஆர்டர் எடுத்து அவற்றைச் செய்து விற்கலாம். அருகிலுள்ள பேக்கரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுக்கலாம்.

* குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இட வசதி இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தலாம். உதவிக்கு ஒன்றிரண்டு ஆட்களை வைத்துக் கொள்ளலாம்.

* உங்கள் வீட்டில் தோட்டம் போடுகிற அளவுக்கு இட வசதி உண்டா? மொட்டை மாடியாக இருந்தாலும் பரவாயில்லை. காய்கறித் தோட்டம் போடுங்கள். தினசரி சில மணி நேரத்தை அதைப் பராமரிப்பதில் செலவிடுங்கள். உங்கள் வீட்டுக்கான காய்கறிச் செலவை மிச்சப்படுத்தலாம். நீங்களே பயிரிட்ட காய்களை சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.

* உங்களுடையது பெரிய வீடா? உபயோகிக்க ஆளில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டை சினிமா மற்றும் டி.வி படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடலாம். தினசரி வாடகை கிடைக்கும்.

* நல்ல குரல் வளம் உள்ளவரா நீங்கள்? பாடகியாகும் அளவுக்கு உங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை. படங்களுக்கு, விளம்பரங்களுக்கு, டி.வி தொடர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கலாம். விளம்பர நிறுவனங்களுடன், டி.வி தொடர் தயாரிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

* எழுத்துத் துறையில் ஆர்வமுள்ள வராக இருந்தால் உங்களைக் கவர்கின்ற செய்திகளை, சுவாரசியமாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்.

* படித்த படிப்பு வீணாகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கலாமே? உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப குறிப்பிட்ட வகுப்புகள் வரை கற்றுத் தரலாம்.

* டெய்லரிங் தெரிந்திருந்தால் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டாருக்குத் துணிகள் தைத்துக் கொடுக்கலாம். பெரியளவில் தைக்கத் தெரியாவிட்டாலும் கூட மேல் தையல் போட்டுக் கொடுப்பது, ஓரம் அடித்துக் கொடுப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளை செய்து தரலாம்.

ஆன்லைனில் கண்களின் பார்வை திறனை இலவசமாக பரிசோதிக்க

எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் புற்றீசல் போல உருவாகின்றன. இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணினி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஆன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம் என இங்கு பார்க்கலாம்.

கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடித்து ஆன்லைன் பரி சோதிப்போம் வாருங்கள்.
  • உங்கள் கணினி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும்.
  • உங்கள் கணினியில் Flash Player இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
  • அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடை பிடிக்கவேண்டிய வழிமுறைகள் கொடுக்க பட்டிருக்கும்.
  • அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு பகுதி தெரியும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்கள் கணினி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் கணினி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும்.
  • அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.
  • ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே சாலச்சிறந்தது.

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா?

உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளத்தில் நீங்கள் நுழைந்து, உங்கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனைவது நபர் என்ற எண்ணிக்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா.,வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த நம்பர் உங்களுக்கு வழங்கப்படும்.


முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகும் அதில் தற்போதைய மக்கள் தொகை எண் இருக்கும். (அதை கவனியுங்கள் ஒவ்வொரு நொடிக்கும் 5 முதல் 10 அதிகமாகி கொண்டே இருக்கும். அவ்வளவு வேகத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டு உள்ளது) அதில் உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும்.


Get Started என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் இன்று விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவும்.


விவரங்களை பூர்த்தி செய்த பிறகு கீழே உள்ள Proceed என்ற பட்டனை அழுத்தினால் அடுத்த வினாடி உங்களுக்கு முன்னாடி உலகில் எத்தனை பேர் பிறந்து உள்ளார்கள் என காட்டும்.


மற்றும் உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களின் எண்ணிக்கை கண்டங்களின் அடிப்படையில் பிரித்து காட்டும்.

இந்த தளத்திற்கு செல்ல -www.7billionandme.org

டிஸ்கி: இந்த தகவலை எனக்கு அறியப் படுத்திய பதிவர் வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கு மிக்க நன்றி...

ஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு

இந்தியாவின் பிரபல வங்கியான ஐசிஐசிஐ தற்பொழுது புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு சேவையை துவங்கி உள்ளது. இதற்கு B2 Digital Banking என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆன்லைன் வங்கி கணக்கின் மூலம் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்வது மட்டுமின்றி மின்சாரம், தொலைபேசி போன்றவைகளுக்காண பில் தொகையும் செலுத்த முடியும். மற்றும் இந்த சேமிப்பு கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு வருடத்திற்கு 3.5% என்ற வட்டி விகிதத்தில் கூடுதல் பணமும் கிடைக்கும்.


இந்த B2 ஆன்லைன் கணக்கை துவங்க நீங்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை மற்றும் zero balance-ல் கணக்கை தொடர முடியும். மற்றும் எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை. இந்த வங்கி கணக்கு தற்பொழுது சென்னை உட்பட சில இந்திய நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே பெற முடியும்.

வழிமுறைகள்:
  • B2 ஆன்லைன் சேமிப்பு வங்கி கணக்கு வேண்டுவோர் இந்த லிங்கில் சென்று Apply here என்ற படிவத்தை பூர்த்தி செய்து வங்கிக்கு அனுப்பவும்.
  • பிறகு படிவத்தில் கொடுத்த ID Proof, Address Proof மற்றும் ஒரு கலர் போட்டோ வை வைத்திருக்கவும்.
  • மூன்று நாட்களுக்குள் வங்கி நபர் உங்களை தொடர்பு கொண்டு இவைகளை பெற்று கொள்வார்கள்.
  • பின்பு உங்கள் கணக்கு தயாரானவுடன் ஈமெயில் மற்றும் SMS மூலமாக உங்களுக்கு தகவல் அனுப்புவார்கள்.
  • மற்றும் உங்கள் கணக்கின் Secret card உங்கள் முகவரிக்கு அஞ்சலில் அனுப்புவார்கள். அதன் மூலம் நீங்கள் B2 ஆன்லைன் கணக்கை ஆக்டிவேட் செய்து கொண்டு உபயோகித்து கொள்ளலாம்.
மேலும் ஏதேனும் தகவல் வேண்டுவோர் இங்கு சென்று பார்த்து கொள்ளவும்.

உங்கள் வலைத்தளத்திலும் நல்ல டிராபிக் உண்டுபண்ண

எவ்வளவுதான் போஸ்ட் செய்தும் நல்லா டிராபிக் வரவில்லையே.....என்பதுதான் இன்றைய பலரின் கவலை.இனிமேல் யாரும் கவைலையே படவேண்டியதில்லை.நானே தங்களுக்கு டிராபிக்கை அதிகரிக்க உதவும் மிக எளிமையான தந்திரத்தை கற்றுக்கொடுக்கிறேன்.இதனை நீங்கள் உங்களின் நண்பர்களின் தளத்திற்கும் செய்து கொடுத்து அவர்களிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற முடியும்.

பொதுவாக நாம் எழுதும் பதிவுகள் Site Title அதான் பின்னால் Post Title என்று தான் வெளியிடப்படும்.இதனால் நீங்கள் இட்ட அனைத்து பதிவுகளின் தலைப்பு பகுதியிலும் உங்களின் வலைத்தளத்தின் Title தான் முதலில் தோன்றும்.ஆனால் நான் இப்போது கொடுக்கும் வழிமுறையை பின்பற்றினால் Post Title அதான் பின்னால் Site Title என்று வெளியிடப்படும்.இதனால் நீங்கள் இட்ட அனைத்து பதிவுகளின் தலைப்பு பகுதியிலும் பதிவுகளின் Title தான் முதலில் தோன்றும்.ஒவ்வொரு பதிவிற்கும் ஒவொரு தலைப்பு என்று வரும்போது நமது தளத்தின் உள்ளே கீவேர்டுகள் பெருகுகிறது அல்லாவா.

எப்படி செய்வது?
பிளாக்கரில் Design செய்து அங்கு Edit HTML இல் அழுத்துங்கள்.பிறகு கீபோர்டில் Ctrl + F அழுத்தினால் உங்கள் புரவுசரில் சர்ச் செய்வது போன்ற ஒரு சிறிய பெட்டி வரும்.அதில் கீழே உள்ள வரியை இட்டு அது எங்கு உள்ளது என்று தேடிப்பிடியுங்கள்.

மேலே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.

அந்த வரியை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கீழே இருக்கும் வரியை சேருங்கள்


மேலே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.

கூகிள் வழங்கும் இணையதள வேலைவாய்ப்பு

உங்க வீட்ல இருந்தே மாதம் இருபதாயிரம் மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.எப்படி?என்ன வேலைன்னு கேட்கறீங்களா?எல்லாத்தையும் நான் உங்களுக்கு விவரமா சொல்றேன்.முக்கியமா இதற்குத் தேவையானது மூன்றே விஷயம்தான்,

1.கம்ப்யூட்டர்(கணினி)
2 .இன்டர்நெட் கனெக்சன்
3 .திறமை

இது மூன்றும் உங்களிடம் இருதால் நான் முதலில் சொல்லியதை விட அதிகமாகவே சம்பாதிக்கலாம்.ஏன்னா,உங்க வீட்ல கம்ப்யூட்டரும் இண்டர்நெட் கனேக்சனும் இருந்தாலே உலகமே உங்கள் கைக்குள் இருப்பது போல.இதுல நீங்க எந்த விசயத்தையும் எந்த நேரத்தில் வேணும்னாலும் தெரிஞ்சுக்கலாம்.அதே மாதிரி இதுல பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளும் கொட்டிக்கடக்குது.நிறைய கம்பனிகள் போட்டி போட்டுக்கிட்டு வேலை வாய்ப்புகளை அள்ளித்தறாங்க.நான் இப்போது ஆன்லைனில் வேலை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். ஏன்னா,இது மாதிரி லட்சம் கம்பனிகள் இருக்குது.அதுனாலதான் முன்னணியில் உள்ள நிருவனங்களைப்பற்றி மட்டும் சொல்கிறேன்.

கூகிள்

கணினி உலகில் கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் கணினியைப்பற்றி தெரியாதவர்கலாத்தான் இருக்க வேண்டும்.கூகிள் ஏராளமான வேலை வாய்ப்புகளை எங்கள் மூலமாக உங்களுக்கு அள்ளி வழங்குகிறது."கூகிள் ஆட்சென்ஸ்" பெயரில் இந்த வேலையை வழங்குகிறது.

ஆட்சென்ஸ் என்பது என்ன?
நீங்கள் தினமும் தினத்தந்தி,தினமலர் போன்ற நாளிதழ்களை படிக்கிறீர்கள் அல்லவா?அதில் நிறைய கம்பெனிகளின் விளம்பரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நம் தொழில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக நாம் நாளிதழில் விளம்பரம் செய்கிறோம்.அதே போல்தான் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை பிரபலமடையச்செய்ய கூகிளிடம் விளம்பரம் செய்கின்றன. ஏனென்றால் இன்று கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.எனவேதான் அவர்கள் கூகுளிடம் விளம்பரம் செய்கிறார்கள்.அந்த விளம்பரங்களை கூகிள் நம்மிடையே பிரித்து வழங்குகிறது.நாம் அந்த விளம்பரங்களைப் பிரபலப்படுத்துவதற்கு நமக்கு ஒரு கமிசன் தருகிறது கூகிள்.
கூகிள் அட்சென்ஸ் எப்படி வேலை செய்கிறது?
உங்களுக்கு ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொடுத்து ,அதுல கூகுளின் விளம்பரங்களைப்போட்டு கொடுத்திடுவோம்.உங்க வெப்சைட்டை பிரபலமடையச்செய்ய வேண்டும்।அப்ப உங்க வெப்சைட்ட பார்க்க வரவங்க உங்க சைட்ல இருக்கிற விளம்பரங்களை வெறும் கிளிக் பன்னி பாத்தாலே உங்கள் கணக்கில் ஒரு அமௌன்ட் ஏறிவிடும்।ஒவ்வொரு கிளிகிற்கும் பணம் தருவது கூகிள் மட்டுமே.
உதாரணத்திற்கு
http://forum.akavai.com/topic66.html இங்கே கிளிக் செய்து எமது கிளையன்டுகளின் வெப்சைட்டுகளை பாருங்கள்.

பிளாக்கர் : வலைப்பூக்களில் அழகான மெனு பார்கள் (சி.எஸ்.எஸ்.மெனு ) CSS Menu For blog



அதிகமாக பெரிய இணையதளங்களில் பயன்படுத்த படும் சி.எஸ்.எஸ் பட்டன் -களை நமது ப்ளாக்கில் இலவசமாக இணைக்க இந்த பதிவு பயன்ப்படும்


ப்ளாக்கில் கர்டியான்ட் மெனு பட்டன்களை எப்படி இணைக்கலாம் என்று பார்போம் ... நம் வலைப்பதிவு(வலைப்பூ)க்கு வந்து பார்வையிடும் பார்வையாளர்கள் வந்து பார்த்தவுடன் மெனு பகுதிக்கு செல்வார்கள் ..
அடுத்த பக்கங்களை புரட்டுவதற்கு இந்த மெனு பார் உதவுகிறது ..

1.BLOGGER DASH BORAD - SELECT SITE ADMIN - TEMPLATE- EDIT HTML 


</head>
கோடிங்கை தேடி அதன் மேலே கீழே உள்ள நிரலை PASTE செய்யவும் ..


<style type="text/css">

.gradientbuttons ul{
padding: 3px 0;
margin-left: 0;
margin-top: 1px;
margin-bottom: 0;
font: bold 13px Verdana;
list-style-type: none;
text-align: center; /*set to left, center, or right to align the menu as desired*/
}

.gradientbuttons li{
display: inline;
margin: 0;
}

.gradientbuttons li a{
text-decoration: none;
padding: 5px 7px;
margin-right: 5px;
border: 1px solid #778;
color: white;
border:1px solid gray;
background: #3282c2;
border-radius: 8px; /*w3c border radius*/
box-shadow: 3px 3px 4px rgba(0,0,0,.5); /* w3c box shadow */
-moz-border-radius: 8px; /* mozilla border radius */
-moz-box-shadow: 3px 3px 4px rgba(0,0,0,.5); /* mozilla box shadow */
background: -moz-linear-gradient(center top, #a4ccec, #72a6d4 25%, #3282c2 45%, #357cbd 85%, #72a6d4); /* mozilla gradient background */
-webkit-border-radius: 8px; /* webkit border radius */
-webkit-box-shadow: 3px 3px 4px rgba(0,0,0,.5); /* webkit box shadow */
background: -webkit-gradient(linear, center top, center bottom, from(#a4ccec), color-stop(25%, #72a6d4), color-stop(45%, #3282c2), color-stop(85%, #357cbd), to(#72a6d4)); /* webkit gradient background */
}

.gradientbuttons li a:hover{
color: lightyellow;
}

.redtheme li a{
font-size:18px;
background: darkred;
background: -moz-linear-gradient(center top, #f5795d, #e55e3f 25%, #d02700 45%, #e55e3f 85%, #f5795d);
background: -webkit-gradient(linear, center top, center bottom, from(#f5795d), color-stop(25%, #e55e3f), color-stop(45%, #d02700), color-stop(85%, #e55e3f), to(#f5795d));
}

.greentheme li a{
font-size:12px;
background: green;
background: -moz-linear-gradient(center top, #7ad690, #3ec05c 25%, #298a40 45%, #3ec05c 85%, #7ad690);
background: -webkit-gradient(linear, center top, center bottom, from(#7ad690), color-stop(25%, #3ec05c), color-stop(45%, #298a40), color-stop(85%, #3ec05c), to(#7ad690));
}

.blacktheme li a{
font-size:16px;
background: black;
background: -moz-linear-gradient(center top, #9f9f9f, #686868 25%, #2a2a2a 45%, #686868 85%, #9f9f9f);
background: -webkit-gradient(linear, center top, center bottom, from(#9f9f9f), color-stop(25%, #686868), color-stop(45%, #2a2a2a), color-stop(85%, #686868), to(#9f9f9f));
}

.orangetheme li a{
font-size:14px;
background: #e55e3f;
background: -moz-linear-gradient(center top, #ecad9a, #e5937c 25%, #cf4c2a 45%, #e5937c 85%, #ecad9a);
background: -webkit-gradient(linear, center top, center bottom, from(#ecad9a), color-stop(25%, #e5937c), color-stop(45%, #cf4c2a), color-stop(85%, #e5937c), to(#ecad9a));
}

</style>

_______________________________________________________________________________


2.அதன் பின் DESIGN -ADD GETJET / WIDGET/ PAGE ELEMENT - SELECT HTML & JAVASCRIPT -பேஸ்ட் செய்யவும் ..

உதா  நிற பட்டனுக்கு மட்டும்

<div class="gradientbuttons">
<ul>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
</ul>
</div>
______________________________________________________________________

சிவப்பு நிற பட்டனுக்கு மட்டும்

<div class="gradientbuttons redtheme">
<ul>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
</ul>
</div>
______________________________________________________________________

 பச்சை நிற பட்டனுக்கு மட்டும் 

<div class="gradientbuttons greentheme">
<ul>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
</ul>
</div>
________________________________________________________________________

கருப்பு நிற பட்டனுக்கு மட்டும்

<div class="gradientbuttons blacktheme">
<ul>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
</ul>
</div>
__________________________________________________________________________

லைட் சிவப்பு நிற பட்டனுக்கு மட்டும்

<div class="gradientbuttons orangetheme">
<ul>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE">MENU</a></li>
</ul>
</div>
__________________________________________________________________________


MENU - என்னும் இடத்தில் மெனு பெட்டியில்என்ன இருக்க வேண்டும் 
என்று எழுதிட வேண்டும் . 

URL HERE - என்னும் இடத்தில் URL கொடுத்து விடுங்கள் ..