பிளாக்கர் tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிளாக்கர் tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூன், 2013

ப்ளாக்கர் : புதுமையான Related Post Widget




Relatedpostwidget


பிளாக்கர் தளத்தில் பலரும் பல தொடர்புடைய இடுகைகள் பக்க உறுப்பை பார்திருப்பீர்கள் . ஒரு பதிவை படிக்கும் போது அந்த பதிவு தொடர்பான இடுகைகளை காண்பிப்பது தான் தொடர்புடைய இடுகைகள் பக்க உறுப்பு (Related Post Widget ) ... படத்துடன் கூடிய தொடர்புடைய இடுகைகள் ... படம் இல்லாமல் உள்ள Related Post widget போன்ற வற்றை பார்த்திருப்போம் ...


இன்று நாம் பார்க்க போகும் Related Post widget கொஞ்சம் வித்தியாசமான முறையில் உருவாக்கப் பட்டது ...

நீங்கள் ஒவ்வொரு முறை பதிவிடும் போதும் Labels என்ற பகுதியில் பதிவுகளுக்கேற்ற குறிச்சொற்களை பயன்படுத்துங்கள். அப்படி குறிச்சொற்களை பயன்படுத்தியிருந்தால் தான் இது பயனளிக்கும்.

அந்த விட்ஜெட் -ஐ கொண்டு வர நாம் செய்ய வேண்டியது :

என்பதை தேடி அதற்கு முன்னால்

கீழே வரும் கோடிங்கை PASTE செய்யவும் ...


]]></b:skin>


#related-posts{float:left}
#related-posts h2{background: none repeat scroll 0 0 transparent;
color: #666666;
font-size: 14px;
text-align: left;
}
#related-posts ul{margin:5px 0;width:524px;padding:0;list-style-type:none}
#related-posts ul li{position:relative;float:left;border:0 none;margin-right:18px;width:76px}
#related-posts ul li:hover{z-index:98}
#related-posts ul li:hover img{border:3px solid #BBB}
#related-posts ul li:hover div{position:absolute;top:40px;left:10px;margin-left:0;width:200px}
#related-posts ul li img{border:3px solid #DDD;width:70px;height:70px;background:#FFF}
#related-posts ul li div{position:absolute;z-index:99;margin-left:-999em}
#related-posts ul li .title{border:1px solid #CCC;background:#FFF;padding:5px 10px}



2. <data:post.body/> (இதற்கு பின்னால் )
அல்லது

<div class='post-footer'> (இதற்கு முன்னால் )

என்பதை தேடி அதற்கு பின்னால் கீழே வரும் கோடிங்கை PASTE செய்யவும்


<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div style='clear:both'/>
<div id='related-posts'>
<script type='text/javascript'>var ry=&#39;<h2>Related Posts</h2>&#39;;rn=&#39;<h2>No Related Posts</h2>&#39;;rcomment=&#39;Comment&#39;;rdisable=&#39;Comment off&#39;;commentYN=&#39;yes&#39;;</script>
<script type='text/javascript'>
//<![CDATA[
var nothumb='http://lh4.ggpht.com/_u7a1IFxc4WI/TTjruHJjcfI/AAAAAAAAAk0/i11Oj6i_bHY/no-image.png';dw='';titles=new Array();titlesNum=0;urls=new Array();time=new Array();thumb=new Array();commentsNum=new Array();comments=new Array();function related_results_labels(c){for(var b=0;b<c.feed.entry.length;b++){var d=c.feed.entry[b];titles[titlesNum]=d.title.$t;for(var a=0;a<d.link.length;a++){if('thr$total' in d){commentsNum[titlesNum]=d.thr$total.$t+' '+rcomment}else{commentsNum[titlesNum]=rdisable};if(d.link[a].rel=="alternate"){urls[titlesNum]=d.link[a].href;time[titlesNum]=d.published.$t;if('media$thumbnail' in d){thumb[titlesNum]=d.media$thumbnail.url}else{thumb[titlesNum]=nothumb};titlesNum++;break}}}}function removeRelatedDuplicates(){var b=new Array(0);c=new Array(0);e=new Array(0);f=new Array(0);g=new Array(0);for(var a=0;a<urls.length;a++){if(!contains(b,urls[a])){b.length+=1;b[b.length-1]=urls[a];c.length+=1;c[c.length-1]=titles[a];e.length+=1;e[e.length-1]=time[a];f.length+=1;f[f.length-1]=thumb[a];g.length+=1;g[g.length-1]=commentsNum[a]}}urls=b;titles=c;time=e;thumb=f;commentsNum=g}function contains(b,d){for(var c=0;c<b.length;c++){if(b[c]==d){return true}}return false}function printRelatedLabels(a){for(var b=0;b<urls.length;b++){if(urls[b]==a){urls.splice(b,1);titles.splice(b,1);time.splice(b,1);thumb.splice(b,1);commentsNum.splice(b,1)}}var c=Math.floor((titles.length-1)*Math.random());var b=0;if(titles.length==0){dw+=rn}else{dw+=ry;dw+='<ul>';while(b<titles.length&&b<20&&b<maxresults){if(commentYN=='yes'){comments[c]=' - '+commentsNum[c]}else{comments[c]=''};dw+='<li><a href="'+urls[c]+'" rel="nofollow"><img alt="'+titles[c]+'" src="'+thumb[c]+'"/></a><div class="title"><a href="'+urls[c]+'" rel="nofollow"><h3>'+titles[c]+'</h3></a><span>'+time[c].substring(8,10)+'/'+time[c].substring(5,7)+'/'+time[c].substring(0,4)+comments[c]+'</span></div></li>';if(c<titles.length-1){c++}else{c=0}b++}dw+='</ul>'};urls.splice(0,urls.length);titles.splice(0,titles.length);document.getElementById('related-posts').innerHTML=dw};
//]]>
</script>
<b:loop values='data:post.labels' var='label'>
<script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels&quot;' type='text/javascript'/>
</b:loop>
<script type='text/javascript'>var maxresults=6;removeRelatedDuplicates();printRelatedLabels(&#39;<data:post.url/>&#39;);</script>
</div>
<div style='clear:both'/>
</b:if>










SAVE TEMPLATE அல்லது PREVIEW

பார்த்து SAVE செய்யவும் ...

சரி எப்படி இருக்கும் இந்த விட்ஜெட் :


<----------DEMO ------DEMO--------DEMO------------->

இங்கே செல்லவும்

படங்களை தொட்டு பார்க்கவும்

சந்தேகம் இருந்தால் கேட்கலாம் ... சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்


நன்றி....

வியாழன், 30 மே, 2013

உங்கள் வலைப்பூவை எளிதாக redirect செய்வது எப்படி .

உங்கள் வலைப்பூவின் தலைப்பை ( blog title ) மாற்றி GOOGLE மூலம் அதிக ஹிட்ஸ் பெறுவது எவ்வாறு என்பது பற்றி இங்கே படித்திருப்பீர்கள் .இப்போது உங்கள் வலைப்பூவை எவ்வாறு Redirect செய்வது என்பது பற்றி பார்க்கலாம் . அதற்கு முன் ரீ டைரக்ட் என்றால் என்ன என்று ஓர் சிறிய விளக்கம் .



உதரணமாக நீங்கள் ஓர் வாடகை வீட்டில் குடியிருக்கிறீர்கள் திடீர் என உங்கள் கம்பெனி தங்குவதற்கு உங்களுக்கு இலவசமாக ஓர் வீடு தருகிறது நீங்கள் இரு வீட்டிலும் வசிக்கிறீர்கள் ஆனால் உங்களைத் தேடி வரும் விருந்தினர் , நண்பர்கள் , கடிதங்கள் போன்றவை நீங்கள் வசிக்கும் எதாவது ஒரு வீட்டிற்கு மட்டும் வரவேண்டும் என்று நினைப்பீர்கள் அல்லவா .இதுவும் அது போன்று தான் .

.நீங்கள் வலைப்பூ எழுதிய ஆரம்ப காலத்தில் ஏதாவது ஒரு வலைப்பூவின் பெயரில் எழுதி இருப்பீர்கள் .சிறிது காலம் சென்ற பின் அதை விட்டுவிட்டு ஏதேனும் புதிய பெயரில் வலைப்பூ எழுதி இருப்பீர்கள் , உங்கள் நேரம் நீங்கள் இரண்டாவதாக எழுத ஆரம்பித்த தளம் முன்பு இருந்ததை விட அதிக வரவேற்பை பெற்றிருக்கும் .ஆனாலும் உங்கள் பழைய வலைப்பூவின் வாசகர்கள் பலரும் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை , அல்லது கூகிள் மூலம் வரும் புதிய வாசகர்களும் உங்கள் புதிய வலைப்பூவை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவே உங்கள் பழைய வலைப்பூவின் முகவரியை இட்டால் அது தானாகவே உங்கள் புதிய வலைதள முகவரிக்கு வந்தால் நன்றாய் இருக்குமல்லவா . இதனை ரீ டைரக்ட் ( website redirection )மூலம் எளிதாக செய்யலாம் .


இதனை செயல் படுத்த
#-முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ரீ டைரக்ட் செய்ய விரும்பும் வலைப்பூவின் html பகுதிக்கு செல்லவும்

#-Design- EditHtml - Expand Widget Template செல்லவும்- (இதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை ஒருமுறை Backup செய்து கொள்ளுங்கள்)

#-இங்கே <head> என்னும் பகுதியை தேடவும்

#-அதன் கீழே இந்த ( html code ) கோடை சேர்த்து விடவும் .

<meta content='0;url=http://www.yourblogname.blogspot.com' http-equiv='refresh'/>


http://www.yourblogname.blogspot.com என்பது நீங்கள் எந்த தளத்திற்கு உங்கள் வாசகர்களை ரீ டைரக்ட் செய்கிறீர்கள் என பொருள் படும் எனவே http://www.yourblogname.blogspot.comஇற்கு பதிலாக உங்கள் வலைப்பூவின் தளத்தை மாற்றி save செய்து விடுங்கள். அவ்வளவு தான் இனி உங்கள் பழைய வலைதள முகவரிக்கு செல்லும் அனைத்து வாசகர்களும் உங்கள் புதிய முகவரிக்கு திருப்பி அனுப்பபடுவர்

வலைப்பூவில் சுட்டியின் வலது விசையை முடக்க வேண்டுமா?

உங்களின் வலைப்பூவின் பக்கத்தின் மேல் சுட்டியின் வலதுபுற விசையை செயல்படாமல் தடுக்க ஒரு எளிய வழி ...

1)உங்கள் வலைப்பூவின் (பிளாக்கர்) கட்டுப்பாட்டு பக்கத்திற்கு செல்லவும்

2)லே-அவுட்(layout) டேபிற்கு செல்லவும் .

3)புதிய விட்ஜெட் உருவாக்குவதற்கான லிங்கை தெரிவு செய்யவும்.

4)HTML/JavaScript விட்ஜெட்டை தெரிவு செய்யவும்

5)கீழே உள்ள நிரலை பேஸ்ட் செய்யவும்



6)பிறகு உங்களின் மாற்றங்களை சேவ் செய்யவும் .

இனி உங்களின் வலைப்பூவின் மேல் சுட்டியின் வலது விசை செயல்படாது....

சனி, 12 ஜனவரி, 2013

சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 2)

பதிவர்கள் செய்யும் சில அடிப்படை தவறுகளை பற்றி பார்த்து கொண்டிருக்கும் இந்த தொடரில் நாம் பார்க்க இருப்பது தள வடிவமைப்பை பற்றி. பதிவர்களே உங்கள் பிளாக் முழுவதும் விட்ஜெட்டுக்களாக நிரப்பி உங்கள் பிளாக்கை குப்பை கூடை போல வைத்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு நேரமும் உங்கள் பிளாக் திறக்க வெகு நேரம் ஆகிறதா? டெம்ப்ளேட் தேர்வு செய்வதில் குழப்பமாக உள்ளதா? இந்த கேள்விகளுக்கான பதில் ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. முந்தைய பாகத்திற்கு செல்ல சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 1) இந்த லிங்கில் செல்லுங்கள்.
தளத்தை வடிவமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

டெம்ப்ளேட் தேர்வு செய்தல்:
பிளாக்கர் வலைப்பூக்களுக்கு ஆயிரமாயிரம் இலவச டெம்ப்ளேட்கள் உள்ளன. ஆனால் டெம்ப்ளேட்டை தேர்வு செய்யும் பொழுது பின்புறத்தில் புகைப்படம் ஏதும் இல்லாமல் முற்றிலும் வெண்மை நிற டெம்ப்ளேட்கள் தேர்வு செய்வது நல்லது. பெரும்பாலான வாசகர்களும் வெண்மை நிறத்தையே விரும்புகின்றனர். வெண்மை நிறத்தை தேர்வு செய்வதால் வாசகர்களுக்கு எழுத்துக்கள் படிப்பதில் உள்ள சிரமங்களை(கண்கள் கூசுவது) தவிர்க்கலாம். மற்றும் வலைப்பூவும் வேகமாக திறக்க இந்த வகை டெம்ப்ளேட்கள் உதவுகின்றன. டெம்ப்ளேட் அழகை பார்க்காமல் பல்வேறு வசதிகள் உள்ளதா என்பதை மட்டும் பார்த்து டெம்ப்ளேட் தேர்வு செய்யவேண்டும்.


விட்ஜெட்கள் பொருத்துதல்:
பதிவுலகில் நான், பொன்மலர், பலே பிரபு, வைரை சதீஷ் போன்ற மேலும் பல நண்பர்களும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவு எழுதுகின்றனர். நாங்கள் படித்ததையோ அல்லது தெரிந்ததையோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒரே விட்ஜெட்டை பலரும் வெவ்வேறு வடிவங்களில் பதிவாக போடுவோம். ஆனால் உங்கள் வலைப்பூவிற்கு எந்த விட்ஜெட் பொருத்தமாக இருக்கும், எந்த விட்ஜெட் இணைத்தால் வாசகர்கள் பயன்பெறுவார்கள் என்பதை உறுதி செய்து அதில் உங்களுக்கு தேவையான ஒரு விட்ஜெட்டை மட்டும் வலைப்பூவில் சேர்க்க வேண்டும்.

அனைத்து விட்ஜெட்டுக்களையும் உங்கள் வலைப்பூவில் சேர்த்தால் உங்கள் பிளாக் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதால் பிளாக் வரும் வாசகர்கள் கடுப்பாகி திரும்பி சென்று விடுவார்கள். முடிந்த அளவு பிளாக்கர் தளத்தின் Default விட்ஜெட்டுக்களை மட்டுமே வைத்து கொள்வது நல்லது. அவசியமில்லாமல் மூன்றாம் தள விட்ஜெட்டுக்களை சேர்க்க வேண்டாம்.


அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்:
ஒரு சிலர் தங்கள் பிளாக் அழகாக இருக்க வேண்டும் என நினைத்து பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை வலைப்பூவில் இணைத்து கொள்வார்கள். உதாரணமாக ஒன்றுக்கும் அதிகமான Visitor Counters, பனி கொட்டுவது போன்று, மவுஸ் முனையை மாற்றுவது. உண்மையை சொல்லப்போனால் இந்த விட்ஜெட்டுக்களால் 1% நன்மை கூட உங்கள் வலைப்பூவிற்கு இல்லை. உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் யாரும் உங்கள் பிளாக்கின் அழகை வைத்து வருவதில்லை உங்கள் பிளாக்கின் பதிவுகளுக்காக தான் வருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். மாறாக ஒரு சிலருக்கு இவைகள் வெறுப்பாக தான் சென்று முடியும்.

அதற்க்காக அழகாகவே இருக்க கூடாதான்னு கேட்கிறீங்களா? அழகாக இருக்க கூடாதுன்னு நான் சொல்லவே இல்லையே. 95% வாசகர்களுக்கும் 5% அழகுக்கும் முக்கியத்துவம் கொடுங்கன்னு தான் சொல்றேன்.

பிளாக்கில் இருக்க வேண்டிய முக்கியமான விட்ஜெட்டுகள் என்ன:
குறிப்பிட்ட சில விட்ஜெட்டுக்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அவை என்னனென விட்ஜெட்டுகள் என்பதை கீழே பாருங்கள்.
1. Popular Post Widget
2. Email subscription Widget
3. Social Networking Sites Widget
4. Follower Widget
5. Blog Archive Widget
6. Search Box Widget

இந்த 6 விட்ஜெட்டுகள் கண்டிப்பாக உங்கள் பிளாக்கில் இருக்க வேண்டும். மற்றும் இதனோடு இந்த விட்ஜெட்டை சேர்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கும் மற்ற விட்ஜெட்டுகளையும் வைத்து கொள்ளுங்கள்.

பிளாக்கர் : வலைப்பூக்களில் அழகான மெனு பார்கள் (சி.எஸ்.எஸ்.மெனு ) CSS Menu For blog



அதிகமாக பெரிய இணையதளங்களில் பயன்படுத்த படும் சி.எஸ்.எஸ் பட்டன் -களை நமது ப்ளாக்கில் இலவசமாக இணைக்க இந்த பதிவு பயன்ப்படும்


ப்ளாக்கில் கர்டியான்ட் மெனு பட்டன்களை எப்படி இணைக்கலாம் என்று பார்போம் ... நம் வலைப்பதிவு(வலைப்பூ)க்கு வந்து பார்வையிடும் பார்வையாளர்கள் வந்து பார்த்தவுடன் மெனு பகுதிக்கு செல்வார்கள் ..
அடுத்த பக்கங்களை புரட்டுவதற்கு இந்த மெனு பார் உதவுகிறது ..

1.BLOGGER DASH BORAD - SELECT SITE ADMIN - TEMPLATE- EDIT HTML 


</head>
கோடிங்கை தேடி அதன் மேலே கீழே உள்ள நிரலை PASTE செய்யவும் ..


<style type="text/css">

.gradientbuttons ul{
padding: 3px 0;
margin-left: 0;
margin-top: 1px;
margin-bottom: 0;
font: bold 13px Verdana;
list-style-type: none;
text-align: center; /*set to left, center, or right to align the menu as desired*/
}

.gradientbuttons li{
display: inline;
margin: 0;
}

.gradientbuttons li a{
text-decoration: none;
padding: 5px 7px;
margin-right: 5px;
border: 1px solid #778;
color: white;
border:1px solid gray;
background: #3282c2;
border-radius: 8px; /*w3c border radius*/
box-shadow: 3px 3px 4px rgba(0,0,0,.5); /* w3c box shadow */
-moz-border-radius: 8px; /* mozilla border radius */
-moz-box-shadow: 3px 3px 4px rgba(0,0,0,.5); /* mozilla box shadow */
background: -moz-linear-gradient(center top, #a4ccec, #72a6d4 25%, #3282c2 45%, #357cbd 85%, #72a6d4); /* mozilla gradient background */
-webkit-border-radius: 8px; /* webkit border radius */
-webkit-box-shadow: 3px 3px 4px rgba(0,0,0,.5); /* webkit box shadow */
background: -webkit-gradient(linear, center top, center bottom, from(#a4ccec), color-stop(25%, #72a6d4), color-stop(45%, #3282c2), color-stop(85%, #357cbd), to(#72a6d4)); /* webkit gradient background */
}

.gradientbuttons li a:hover{
color: lightyellow;
}

.redtheme li a{
font-size:18px;
background: darkred;
background: -moz-linear-gradient(center top, #f5795d, #e55e3f 25%, #d02700 45%, #e55e3f 85%, #f5795d);
background: -webkit-gradient(linear, center top, center bottom, from(#f5795d), color-stop(25%, #e55e3f), color-stop(45%, #d02700), color-stop(85%, #e55e3f), to(#f5795d));
}

.greentheme li a{
font-size:12px;
background: green;
background: -moz-linear-gradient(center top, #7ad690, #3ec05c 25%, #298a40 45%, #3ec05c 85%, #7ad690);
background: -webkit-gradient(linear, center top, center bottom, from(#7ad690), color-stop(25%, #3ec05c), color-stop(45%, #298a40), color-stop(85%, #3ec05c), to(#7ad690));
}

.blacktheme li a{
font-size:16px;
background: black;
background: -moz-linear-gradient(center top, #9f9f9f, #686868 25%, #2a2a2a 45%, #686868 85%, #9f9f9f);
background: -webkit-gradient(linear, center top, center bottom, from(#9f9f9f), color-stop(25%, #686868), color-stop(45%, #2a2a2a), color-stop(85%, #686868), to(#9f9f9f));
}

.orangetheme li a{
font-size:14px;
background: #e55e3f;
background: -moz-linear-gradient(center top, #ecad9a, #e5937c 25%, #cf4c2a 45%, #e5937c 85%, #ecad9a);
background: -webkit-gradient(linear, center top, center bottom, from(#ecad9a), color-stop(25%, #e5937c), color-stop(45%, #cf4c2a), color-stop(85%, #e5937c), to(#ecad9a));
}

</style>

_______________________________________________________________________________


2.அதன் பின் DESIGN -ADD GETJET / WIDGET/ PAGE ELEMENT - SELECT HTML & JAVASCRIPT -பேஸ்ட் செய்யவும் ..

உதா  நிற பட்டனுக்கு மட்டும்

<div class="gradientbuttons">
<ul>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
</ul>
</div>
______________________________________________________________________

சிவப்பு நிற பட்டனுக்கு மட்டும்

<div class="gradientbuttons redtheme">
<ul>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
</ul>
</div>
______________________________________________________________________

 பச்சை நிற பட்டனுக்கு மட்டும் 

<div class="gradientbuttons greentheme">
<ul>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
</ul>
</div>
________________________________________________________________________

கருப்பு நிற பட்டனுக்கு மட்டும்

<div class="gradientbuttons blacktheme">
<ul>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
<li><a href="URL HERE"> MENU</a></li>
</ul>
</div>
__________________________________________________________________________

லைட் சிவப்பு நிற பட்டனுக்கு மட்டும்

<div class="gradientbuttons orangetheme">
<ul>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE">MENU</a></li>
<li><a href="URL HERE">MENU</a></li>
</ul>
</div>
__________________________________________________________________________


MENU - என்னும் இடத்தில் மெனு பெட்டியில்என்ன இருக்க வேண்டும் 
என்று எழுதிட வேண்டும் . 

URL HERE - என்னும் இடத்தில் URL கொடுத்து விடுங்கள் ..

வெள்ளி, 4 ஜனவரி, 2013

இலவச பிளாக்கர் டேம்ப்லேட்கல்


உங்கள் பிளாக்கில் பழைய template பார்த்து போர் அடிகுத்தா கவலை வேண்டாம் உங்களுக்காக நான் இலவச ப்ளாக் template கீழே கொடுத்துளேன் .



எப்படி இன்ஸ்டால் செய்வது ?


இவை அனைத்தும் நிச்சியம் இன்ஸ்டால் ஆகும் .



 
 
 
 
 
 
 
 
 
 

Johny White Blue Magazine Template


 
 
 
 
 
 
 
 
 
 
 

Johny Blue Magazine Blogger Template

 
 
 
 
 
 
 
 
 
 
 

Johny Red White Magazine Template

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fashion Store Blogger Template

 
 
 
 
 
 
 
 
 
 

Kiddiez Shop Blogger Template

 
 
 
 
 
 
 
 
 
 
 

ModernCars Blogger Template

 
 
 
 
 
 
 
 
 
 
 

Savarona Blogger Template

 
 
 
 
 
 
 
 
 
 
 

Eudora Blogger Template

 
 

 

 

 

 

MovieSpot Blogger Template






.






நன்றி

செவ்வாய், 1 ஜனவரி, 2013

உங்கள் பெயரிலே இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)

இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.



அத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்.

1. Webs
இணையத்தளமுகவரி: http://www.webs.com/

http://www.anbuthil.com/


2. Webnode
இணையத்தளமுகவரி: http://www.webnode.com/

http://www.anbuthil.com/


3. Wetpaint
இணையத்தளமுகவரி: http://www.wetpaintcentral.com/page/Create+Your+Own+Site

http://www.anbuthil.com/


4.Weebly
இணையத்தளமுகவரி: http://www.weebly.com/


5. yola
இணையத்தளமுகவரி: http://www.yola.com/

http://www.anbuthil.com/


6. own-free-website
இணையத்தளமுகவரி: http://www.own-free-website.com/





7. Jimdo
இணையத்தளமுகவரி: http://www.jimdo.com/

http://www.anbuthil.com/

உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திட சில டிப்ஸ்


தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன.இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம்.



1. முகப்பு பக்க அளவு:

உங்கள் இணைய தளம் பதிக்கப்பட்டு சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரையில் அல்லது ஓராண்டு காலத்தில் உங்கள் தளத்தின் முகப்பு பக்கம் வழியாகத்தான் அனைவரும் நுழைவார்கள். (பொதுவாக இந்த முகப்பு பக்கத்தினை index.htm அல்லது default.htm என்று அழைப்பார்கள்.) எனவே இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். முகப்பு பக்கம் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அதனைக் காண விரும்புபவர்கள் எரிச்சல் அடைந்து ஆர்வம் குறைந்து தளத்தைக் காணும் முயற்சியைக் கைவிடுவார்கள். உங்களுடைய தளத்தினைப் பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் காண விரும்புவார்கள் எனில் இந்த முகப்பு பக்கத்தின் அளவு 90 கேபிக்குள் இருப்பது நல்லது. இதுவே இந்திய மக்கள் தான் காண்பார்கள் என்றால் 50 கேபி என்ற அளவிற்குள் இருப்பது நல்லது. இந்த அளவு எச்.டி.எம்.எல். வழி தகவல், பிளாஷ் மற்றும் அனிமேஷன் ஆகிய அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும்.



2. முதல் ஈர்ப்பு:

எந்த பொருளும் மக்களை முதல் பார்வையிலேயே கவர வேண்டும் என்பது பொதுவான ஒரு விஷயமாகும். இன்டர்நெட் தளத்தின் முகப்பு பக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே உங்களைப் பற்றிய தகவல்கள் நச் என்ற வகையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக அதே சமயத்தில் தளத்தின் உள்ளே சென்று பார்க்கும் வகையில் அமைய வேண்டும்.



3. நேரம்:

இப்போது பிளாஷ் தொகுப்பு உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதனைப் பார்ப்பவர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிப்பது நல்லதல்ல. இது அதிக நேரம் எடுக்கும். கட்டாயம் பிளாஷ் காட்சி ஒன்று தேவை என்றால் அதனை பார்வையாளர்கள் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுக்கும் வசதியும் தரப்பட்டிருக்க வேண்டும். வெறும் டெக்ஸ்ட் மட்டும் கூட அழகாக அமைக்கப்படலாம் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தளத்தைக் காண வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் தளத்திற்கும் பெருமை சேர்க்கும்.



4. தொடர்பு:

நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதனைக் காண்பவர்கள் உங்களிடம் சில விளக்கங்கள் வேண்டி உங்களைத் தொடர்பு கொள்ள எண்ணலாம். எனவே எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என முகப்பு பக்கத்திலேயே குறிப்பிட வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி அளிக்கலாம். அல்லது பார்ப்பவரின் கம்ப்யூட்டரில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராமை இயக்கி நேரடியாக மின்னஞ்சல் அனுப்பும் வசதியையும் ஏற்படுத்தலாம்.



5. புதுமை

ஆம் அதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணைய தளத்தை புதுப்பித்துக் கொண்டிருங்கள். அதற்காக அடியோடு அதனை மாற்ற வேண்டியதில்லை. சிறிய மாற்றங்கள் அவ்வப்போது இருப்பது உங்கள் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்கும்.



6. சரக்கு :

ஆம் உங்கள் நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது உங்களின் தனிப்பட்ட தளங்களில் தகவல் சரக்கு நிறைய இருக்க வேண்டும். உங்கள் நிறுவனம் எந்தப் பொருளையேனும் தயாரிப்பதாக இருந்தால் அந்த பொருளைப் பற்றி மட்டுமின்றி உங்கள் நிறுவனம் அதன் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு பற்றியும் நிறைய தகவல்களை நீங்கள் தரலாம்.



7. மேம்பாடு :

உங்கள் நிறுவனம் போல, உங்கள் அமைப்பு போல இயங்கும் மற்றவற்றின் இணைய தளங்களையும் நீங்கள் அடிக்கடி சென்று பார்த்து அவர்கள் செய்திடும் மாற்றங்கள், மேம்படுத்தும் தகவல்கள் ஆகியவற்றையும் கண்டறிந்து ஆய்வு செய்து உங்கள் தளத்தையும் அதே போல இல்லாமல் அதைவிடச் செறிவாக மேம்படுத்துங்கள்.

8. சோதனை

உங்கள் இணைய தளம் உங்களுக்குப் பிடித்த பிரவுசரில் மட்டும் சரியாக இயங்கக் கூடாது; மற்ற பிரவுசர்களிலும் மிகச் சரியாக இயங்க வேண்டும். அப்போது தான் அனைத்து தரப்பினரையும் உங்களால் கவர முடியும். அத்துடன் பல்வேறு ரெசல்யூசன் அமைப்பிலும் உங்கள் இணைய தளத்தைச் சோதனை செய்து பார்த்திட வேண்டும். வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயக்கிப் பார்த்திட வேண்டும்.

9. படங்கள்

நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இறங்குகின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறிய வேண்டும். வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்த படங்கள் எப்படி இறங்கி இயங்குகின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.



10. சொல்லும் மொழி

உங்கள் மொழி நடையை ஸ்டைலாக அமைப்பதற்கு முன் அதில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழை இல்லாமல் இருப்பதனை ஒன்றுக்குப் பல முறை உறுதி செய்து கொள்ளுங்கள். தமிழ் மொழியில் உங்கள் தளத்தில் தகவல்கள் தரப்பட்டால் அந்த எழுத்துருவினை டவுண் லோட் செய்து கொள்ள வசதி செய்து தர வேண்டும். அந்த வசதி உள்ளது என்பதனை ஒரு ஜேபெக் பட பைலாகவோ அல்லது ஆங்கிலத்திலோ அமைக்கலாம்.



11. எழுத்துரு

அனைவருக்கும் தெரிந்த எழுத்துருக்களில் உங்கள் தகவல் தளத்தை அமைப்பது நல்லது. அப்போது தான் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் பழக்கப்பட்ட தளம் போல உங்கள் தளம் காட்சியளிக்கும்.



12. எளிதான தாவல்

உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்திலிருந்து தகவல்களுக்காக நேயரை மற்ற தளத்திற்கு இழுப்பது மிக எளிதான ஒன்றாக இருக்க வேண்டும். அவை உடனடியாக இறக்கம் செய்யப்படும் வகையில் தரப்பட வேண்டும். எந்த பக்கத்தில் இருந்தாலும் பிற பக்கங்களுக்குச் செல்வதற்கு எளிதான வழி அமைத்துத் தரப்பட வேண்டும்.



13. விளம்பரம்

உங்கள் இணைய தளம் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக விளம்பரங்களுக்கு இடம் தருவது தவறில்லை. ஆனால் அவை அளவுக்கு மீறி இடம் பெறக் கூடாது. இரண்டு விளம்பரங்களுக்கு மேல் இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கும்.



14. பாதுகாப்பு

இணைய தளத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் அதன் பாதுகாப்பு. உங்கள் இணைய தளத்தினுள் யாரும் நுழைய முடியாதபடி பாதுகாப்பு வளையங்களை அமைத்து அவற்றை அடிக்கடி மாற்றி மாற்றி அமைத்துவிட வேண்டும்.



உங்கள் இணைய தளப் படங்களை பிறர் திருடாமலிருக்க செய்ய வேண்டியவை

பலரும் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் அவை சார்ந்த படங்களை இணைத்து இணைய தளங்களை அமைக்கிறார்கள். ஆனால் இந்த தளங்களைப் பார்க்கும் நேயர்கள் இவற்றில் உள்ள படங்களை அப்படியே காப்பி செய்து தங்களுடைய விருப்பப்படிப் பயன்படுத்துகிறார்கள். சிலர் அவற்றை மற்றவர்களுக்கு விற்று விடுகிறார்கள். சிலரோ அவற்றைக் கீழ்த் தரமாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த திருட்டை எப்படித் தடுப்பது? இது குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம். இணைய தளங்களில் பொருத்தப்பட்டு காட்சியளிக்கிற படங்களை காப்பி செய்ய முடியாதவாறு தடுக்க சில வழிகள் உள்ளன. உங்கள் வழிகளை மீறி படங்களைச் சாதாரண பயனாளர்களால் காப்பி செய்ய முடியாது. ஆனால் கம்ப்யூட்டர் விற்பன்னர்களால் காப்பி செய்ய முடியும்.



ரைட்கிளிக் செய்வதை தடுக்க:

பொதுவாக ஓர் இணைய தளத்தில் உள்ள படத்தால் ஈர்க்கப்பட்டவர் அதை காப்பி செய்ய அதை ரைட்கிளிக் செய்வார். மெனு கிடைக்கும். அதில் Save Image As என்பதைப் போன்ற கட்டளை தெரியும். அதை கிளிக் செய்தால், அந்தப் படம் அவர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். எனவே ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி, ரைட்கிளிக் செய்தால் மெனு கிடைக்காதவாறு செய்து விட வேண்டும். மெனு கிடைக்காததால் Save Image As கட்டளையை அவரால் செயல்படுத்த முடியாது. ரைட்கிளிக் செய்யும் பொழுது கிடைக்கிற மெனுவில் வேறு நல்ல பயனுள்ள கட்டளைகளும் உள்ளன. எனவே ரைட்கிளிக்கால் கிடைக்கிற மெனுவைத் தடுத்துவிட்டால், அந்த நல்ல கட்டளைகளை உங்கள் இணைய தளத்துக்கு வருபவர்களால், உங்கள் வெப் தளத்தில் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு எரிச்சல் ஏற்படும். மீண்டும் உங்கள் தளத்துக்கு வரமாட்டார்கள்.



வேறு படத்தை காப்பி செய்யும்படி ஏமாற்ற:

ரைட்கிளிக் செயலை ஜாவாஸ்கிரிப்ட் மூலம் தடுக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா? Rollover என்ற ஜாவாஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்த வேண்டும். யாரும் காப்பி செய்யக் கூடாது என நீங்கள் நினைக்கிற படத்தை வெப் பக்கத்தில் காட்டுங்கள். மவுஸை அந்த படத்தின் மேல் கொண்டு சென்றால் வேறு படம் தெரியும்படி, ஜாவாஸ்கிரிப்டில் Rollover கட்டளையில் கூறிவிடுங்கள். எனவே உங்கள் வெப் பக்கத்தை பார்வையிடுபவருக்கு அந்த படம் தெரியும். ஆனால் அதை காப்பி செய்ய மவுஸை அதன் மேல் கொண்டு போனால் அந்த படம் மறைந்து வேறுபடம் காட்சியளிக்கும். எனவே ரைட் கிளிக் மூலம் காப்பி செய்தால் அந்த புதிய படம்தான் அவர் கம்ப்யூட்டரில் காப்பியாகும். எப்போதும் உங்கள் படம்தான் தெரிய வேண்டும் மவுஸைக் கொண்டு போனவுடன் வேறு படம் தெரியக் கூடாது என நினைத்தால் அதற்கும் வழி உள்ளது. Transparent Gif படத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பிறகு Embedded style sheet மூலம் அந்த Transparent Gif படத்தின் கீழே உங்கள் படத்தை வைத்து விடுங்கள். உங்கள் படத்தின் மேலே கண்ணாடி காகிதம்போல் Transparent Gif வீற்றிருப்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாது. ரைட்கிளிக் செய்து படத்தை காப்பி செய்கிறவர்களுக்கு கண்ணாடி காகிதமான Transparent Gif படமே காப்பியாகும். அதன் கீழேயுள்ள உங்கள் படம் காப்பியாகாது.



படத்தைத் துண்டுகளாக மாற்றி வெப் தளத்தில் போட:

ஒரு படத்தை அப்படியே உங்களது இணையப் பக்கத்தில் வைக்காதீர்கள். அதைப் பல துண்டுகளாகப் பிரித்து அந்த துண்டுகளை வெப் பக்கத்தில் அமைத்திடுங்கள். எனவே உங்கள் படத்தை காப்பி செய்ய விரும்புகிறவர் அந்த துண்டுகளையெல்லாம் காப்பி செய்து பின்பு ஏதாவது இமேஜ் எடிட்டிங் புரோகிராம் கொண்டு அவற்றை ஒட்ட வைக்க வேண்டும். இந்த எரிச்சல் பிடித்த வேலைக்கு பயந்து அந்த துண்டுகளை காப்பி செய்யாமல் விட்டுவிடுவார்கள்.



படத்தினுள் வாட்டர் மார்க்கை நுழைக்க:

படத்தை அப்படியே வெப் பக்கத்தினுள் கொண்டு வரக்கூடாது. அந்த படத்தின் உள்ளே உங்கள் பெயர் அல்லது வேறு ஏதாவது எச்சரிக்கைச் செய்தியை வாட்டர் மார்க்காக நுழைத்து விட வேண்டும். படத்துக்கு இடையூறு இல்லாமல் ஆனால் படத்தை காப்பி செய்பவர்களுக்கு அது பயன்படாதவாறுவாட்டர் மார்க் இருக்க வேண்டும். ஏதாவது இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் கொண்டு வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். யார் கண்களுக்கும் தெரியாத வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். இதற்கெனவே சில சாப்ட்வேர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக Digimare என்ற சாப்ட்வேர் மூலம் கண்ணிற்கு தெரியாத வாட்டர் மார்க்கை உங்கள் படத்தினுள் உருவாக்கலாம். வாட்டர் மார்க் தெரியாததால் எல்லாரும் உங்கள் படத்தை காப்பி செய்யலாம். ஆனால் அப்படி காப்பி செய்தவர்கள் மீது சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

HTML Code 'ஐ ஒரு அழகான பெட்டிக்குள் வைப்பது எப்படி?

நமது பிளாக்/தளத்தின் லோகோ மற்றவர்க்கு வழங்குவதற்கும், மற்றும் டூல்பார், Widget வழங்குவதற்கும் HTML மற்றும் JavaScript போன்ற இனைய மொழிகளைதான் பயன்படுத்துகிறோம். அதை வழங்குவதற்கு ஒரு அழகான பெட்டியினுள்
வைத்து வழங்கினால் இடம் அதிகமாக பிடிக்காது, அழகாகவும் இருக்கும். சரி எப்படி இந்த பெட்டியை எப்படி உருக்குவது என்று பார்க்கலாம்.


கீழே உள்ள படத்தில் உள்ளது போல உங்கள் HTML Code தோன்றும்.


முதலில் உங்கள் பிளாக்கர் தளத்தில் உள்நுழைந்துக் கொள்ளுங்கள்.

<textarea name="textarea" cols="40" rows="4" wrap="VIRTUAL">=====your
code=====</textarea>


பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் இருக்கும் your code என்பதை நீக்கிவிட்டு உங்களது HTML Code 'ஐ கொடுங்கள்.
பச்சை வண்ணத்தில் உள்ள cols="40" என்பதுதான் பெட்டியின் உயரம் உங்களுக்கு வேண்டிய அளவு உயரத்தை அமைத்துக் கொள்ளலாம்.

நீலே வண்ணத்தில் உள்ள rows="4" என்பதுதான் பெட்டியின் அகலம் உங்களுக்கு வேண்டிய அளவு அகலத்தை அமைத்துக் கொள்ளலாம்.

பிறகு Widget 'ஐ சேமித்துக் கொள்ளுங்கள் இப்போது உங்கள் வலைபதிவில் HTML Code அழகான பெட்டிக்குள் தோன்றும்.

நன்றி.

புதிய பதிவர்களுக்கான சில ஆலோசனைகள்.



புதிய பதிவர்களுக்கான சில ஆலோசனைகள். நம் வலை பதிவு மெதுவாக இயகுவதர்க்கும். இழப்பதற்கும் முக்கியக் காரணம். நமக்கு தெரியாததை பற்றி எழுதுவது. மற்றும் சில கீழே படியுங்கள்.




Visitor Counter & Online User :
இந்த Widget எல்லாம் எடுத்துவிடுங்கள். இவைகளால் உங்கள் வலை பதிவு தொடங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பதிவை படிக்க வருபவர்களுக்கு வெறுப்புதான் உன்டாகும்.
மற்றும் வருபவர்கள் உங்கள் பதிவை படிப்பதில்தான் கவனம் காட்டுவார்கள். அவர்களுக்கு உங்கள் வலைபதிவிற்க்கு எத்தனை பேர் வந்து சென்றுள்ளார்கள் என்பதெல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
அப்படி பார்த்துவிட்டால் உங்கள் வலை பதிவிற்க்கு வருபவர்கள் கனிசமாக இருந்தால், உங்கள் வலை பதிவு பிரபலமாகாத வலைபதிவு என்று நினைத்துக்கொள்ளக்கூடும்.



Radio வேண்டவே வேண்டாம்:
Radio Widget, கணினி முன் அமரும் அனைவரும் தங்களை சுற்றி அமைதியாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள் மற்றும் மற்றவர்கள் தூங்கும் வேலையில் கணினி உபயோகப்படுத்துபவர்கள் அதிகம் பேர் என்னையும் சேர்த்துதான். நான் வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்க்கு 10:00 PM ஆகும்.
அந்த வேலையில் ஏதாவது வலை பதிவை பார்க்கும் போது ரேடியோ திடீரென பாடத்தொடங்கும்.
இது போன்ற சமயங்களில் உங்கள் வலை பதிவை முழுவதுமாக வெறுத்து ஒதுக்க கூட தயங்க மாட்டார்கள்.
மற்றும் பல Widget'கள் உள்ளன கீழே பட்டியளிட்டுளேன்.

Radio Widgets
Counting Widgets
Online Users Widgets
Flash Widgets

நான் வலை பதிவு ஆரம்பித்தபோது ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. அதில் இதுவும் சில.

மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். வாசகர்களுக்கு பதிவு படிப்பதற்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும்.

வலை பதிவின் அழகை பார்க்க வருபவர்களை விட பதிவை படிக்க வருபவர்களே அதிகம்.

நன்றி ...