தேவையான பொருட்கள்:
செய்முறை:
- கண்ணாடிக்கு அடியில் டிரேசிங் பேப்பரை வைக்கவும் (படம் 1).
- டிரேசிங் பேப்பரில் இருக்கும் டிசைனில் திராட்சைக்கொத்து தவிர மற்ற டிசைன்களை கிளாஸ் அவுட் லைனர் மூலம் கண்ணாடி மேலே வரையவும் (படங்கள் 2, 3).
- இதை பத்து நிமிடம் காயவிட்டால், கிளாஸ் கலர் காய்ந்துவிடும். டிசைன் கட்டங்களுக்கு ஏற்ற அளவில் இருக்கும் கண்ணாடி துண்டுகளை வெள்ளைப்பசை மூலம் கண்ணாடியில் ஒட்டவும் (படங்கள் 4, 5).
- திராட்சைக்கொத்து டிசைனில் வட்ட வடிவ கண்ணாடி துண்டுகளை ஒட்டவும் (படம் 6).
- பழங்களுக்கு மேலே இலை போல வெள்ளைநிற கிளாஸ் கலரால் வரையவும் (படம் 7).
- இப்போது கண்ணாடி துண்டுகளுக்கு கலர் அடிக்க வேண்டும். முதலில் அன்னாசிப்பழ இலை மீது பச்சை நிற கிளாஸ் கலரை துளித்துளியாகக் கொட்டி, பிரெஷ்ஷின் பின்புறத்தால் கண்ணாடி துண்டுகள் மீது பரவலாக அடிக்க வேண்டும் (படங்கள் 8, 9).
- டிசைனுக்கு வெளியே வரைந்திருக்கும் இலைகளுக்கும் இதே போல கலர் அடிக்க வேண்டும் (படம் 10).
- வாழைப்பழத்துக்கு மஞ்சளும், அன்னாசிப்பழத்துக்கு ஆரஞ்சும் அடிக்க வேண்டும் (படங்கள் 11, 12).
- ஆப்பிள்களுக்கு சிவப்பும், பேரிக்காய்க்கு அடர் பச்சைநிறமும் அடிக்க வேண்டும் (படம் 13).
- பழக்கூடைக்கும், வாழை சீப்பின் காம்புக்கும் பிரவுன் கலர் அடிக்கவும் (படம் 14).
- திராட்சைக்கொத்தை அப்படியே விட்டுவிட்டால், பளிச்சென்று கண்ணைப்பறிக்கும் பழக்கூடை தயார் (படம் 15).
உடைந்த கண்ணாடி துண்டுகளும் வண்ணங்களும் மட்டும்தான் மூலப்பொருள் என்பதால் தயாரிப்பு செலவு இருநூறு ரூபாய்க்குள்தான் இருக்கும். கிளாஸ் கலரை பலநிறங்களில் வாங்கிவைத்துக்கொண்டால், இதேபோல விதவிதமான டிசைன்கள் செய்யலாம். ஃபிரேம் செய்து மாட்டிவிட்டால் எந்த வீட்டு வரவேற்பறையாக இருந்தாலும் அதிக அழகோடு மிளிரும்! இதை நண்பர்களுக்குப் பரிசளிப்பதோடு, கேட்கிறவர்களுக்கு நல்ல விலைக்கு விற்கலாம். இனி கண்ணாடி உடைஞ்சுதேன்னு கவலைப்படமாட்டீங்க, தேவையில்லாத கண்ணாடி பொருட்களை நீங்களே உடைச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை!''
http://namthozhi.com/inner.php?&id=396
பதிலளிநீக்கு