சனி, 20 அக்டோபர், 2012

இலவசமாக இனி டொமைன் (வெப்சைட் அட்ரஸ்) பெறலாம்

இலவசமாக டொமைன்
.com, .net, .org, .in என்ற டொமைன்கள் போல .tk என்ற ஒரு டொமைன் எக்ஸ்டென்சனும் உண்டு. மற்ற டொமைன்களை போல இதற்கு எந்த வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. உதாரணத்திற்கு iniyatamil.blogspot.com என்ற ஒரு ப்ளாக் உங்களிடம் உள்ளது என்றால், எளிதாக www.iniyatamil.tk என்ற டொமைனை இலவசமாக பெற்று விடலாம்.
  • முதலில், www.dot.tk என்ற முகவரிக்கு செல்லுங்கள்
  • முகப்பு பக்கத்திலேயே "get a free domain" என்ற கட்டம் இருக்கும்.
  • உங்களுக்கு பிடித்த டொமைன் பெயரை அந்த கட்டத்தில் டைப் செய்து விட்டு செக் செய்து பாருங்கள்.
  • உங்களுக்கு பிடித்த டொமைன் கிடைத்து விட்டால், "go" என்ற பட்டனை அழுத்திவிடவும்.
  • பின்பு அடுத்த பக்கத்தில் "forward this domain to" என்ற option - ஐ, தேர்வு செய்துவிடுங்கள்
  • பின்பு, அந்த வாக்கியத்தின் கீழ் இருக்கும் கட்டத்தில், உங்களது ப்ளாக் முகவரியை டைப் செய்து விடுங்கள்
  • இறுதியாக, அணைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்துவிட்டு சமர்ப்பித்து விடவும்
இனி, நீங்கள் தேர்வு செய்த .tk முகவரியை அட்ரஸ் பாரில் செலுத்தினால், உங்களது வெப்சைட்கு ரிடைரக்ட் ஆகி விடும்.
இந்த .tk முகவரிக்கு DNS (Domain Name Service - தமிழில் களப் பெயர் முறைமை என்பர்) வசதியும் உண்டு. DNS பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த .tk முகவரியை பெற ரெஜிஸ்டர் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை, இருப்பினும் ரெஜிஸ்டர் செய்தால், இன்னும் அதிகமான சேவைகளை பெற்றிடலாம்

  • நீங்கள் தேர்வு செய்த .tk டொமைன் பெயரில் ஈமெயில் முகவரிகளை பெற்றிடலாம். (உதாரணத்திற்கு payanar@iniyatamil.tk) 
  • உங்கள் டொமைனை புதுபிக்கலாம்.
  • Tikinets என்ற சிறப்பு சேவையை பெறலாம். (Tikinets என்பது ஒரு சிறந்த ப்ரோக்ராம், உங்களது .tk முகவரிக்கு நிறைய ஹிட்ஸ்களை தரக்கூடியது)
  • நீங்கள் தேர்வு செய்த டொமைனில் மாற்றங்களை செய்யலாம்.
  • இன்னும் பல சேவைகளை பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக