இந்தியாவில் உள்ள பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களான Flipkart, Amazon மற்றும் Snapdeal ஆகிய மூன்றும் ஆன்லைனில் மிகப்பெரிய சம்பாதிக்கும் வாய்ப்பினை வழங்குகின்றன. ஆன்லைனில் சம்பாதிக்க நினைக்கும் பெரும்பாலனோற்கு இந்நிறுவனங்கள் வழங்கும் வருமான வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஆனால் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இந்த மூன்று நிறுவனங்களில் லட்சகணக்கில் சம்பாதித்து கொண்டு இருக்கின்றனர் .
இந்நிறுவனங்கள் வருமான வாய்ப்பினை வழங்குவதற்கான காரணங்கள்
Flipkart, Amazon மற்றும் Snapdeal ஆகிய மூன்று நிறுவனங்களும் அவர்களுடைய பொருட்களை விற்பனை செய்ய உதவி புரிபவர்களுக்கு அந்த பொருட்களின் விலையில் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்குகின்றன. உதாரணமாகFlipkart இணையத்தளத்தில் ருபாய் 20000 மதிப்புள்ள ஒரு மொபைல் போன் ஒன்றை உங்கள் மூலமாக ஒருவர் வாங்குவதாக கொள்வோம் ,இப்பொழுது Flipkart நிறுவனம் இந்த விற்பனை நடைபெற உதவிய உங்களுக்கு ருபாய்.1000 கமிஷனாக அளிக்கும். உங்கள் மூலமாக Amazon இணையதளத்தில் ருபாய்.20000 மதிப்புள்ள மொபைல் போன் ஒன்றை ஒருவர் வாங்கினால் உங்களுக்கு Rs.1200 கமிஷனாக கிடைக்கும் .
இந்நிறுவனங்கள் வழங்கும் வருமான வாய்ப்பினை பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
Flipkart ,Amazon மற்றும் Snapdeal வழங்கும் வருமான வாய்ப்பினை பெற நீங்கள் அந்தந்த இணையதளங்களில் ஒரு Affiliate partner ஆக இணைய வேண்டும். இந்நிறுவனங்களில் affiliate partner ஆக இணைய நீங்கள் உங்கள் பெயர் , முகவரி,தொலைபேசி எண், PAN Card எண் மற்றும் வங்கி விபரங்களை அளிக்க வேண்டும் .பின்னர் நீங்கள் எந்த விதமான பொருட்களை விற்பனை செய்ய விரும்புகிறீர்கள் என தேர்வு செய்ய வேண்டும் .அதாவது எலெக்ட்ரானிக் பொருட்களையா? மொபைல் போன்களையா? ஆடைகளையா அல்லது வீட்டு உபயோக பொருட்களையா? என தேர்வு செய்ய வேண்டும் .
பின்னர் எந்த இணையதளங்கள் மூலம் அவர்களுடைய பொருட்களை நீங்கள் விற்பனை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் [குறிப்பு : Flipkart, Amazon மற்றும் Snapdeal ஆகிய நிறுவனங்கள் மூலம் நீங்கள் சம்பாதிக்க வேண்டுமானால் நீங்கள் சொந்தமாக ஒரு வெப்சைட் வைத்திருக்க வேண்டும் ]
Flipkart நிறுவனத்தின் affilaite பக்கத்திற்கு செல்ல இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.
Flipkart நிறுவனத்தின் கமிஷன் விபரங்களை அறிய இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.
Amazon நிறுவனத்தின் affiliate பக்கத்திற்கு செல்ல இந்த லின்க்கை கிளிக் செய்யவும் .
Amazon நிறுவனத்தின் கமிஷன் விபரங்களை அறிய இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.
Snapdeal நிறுவனத்தின் affiliate பக்கத்திற்கு செல்ல இந்த லின்க்கை கிளிக் செய்யவும் .
Snapdeal நிறுவனத்தின் கமிஷன் விபரங்களை அறிய இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.
பின்னர் உங்களுடைய Flipkart, Amazon மற்றும் Snapdeal ஆகிய இணையதளங்களின்affiliate account டிற்குள் login செய்து நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் அல்லதுpromote செய்ய விரும்பும் பொருட்களை தேர்வு செய்து உங்களுடைய வெப்சைட்டில் இட வேண்டும். உங்கள் வெப்சைட்டிற்கு வருகை தரும் பார்வையாளர் ( Visitor ) உங்கள் வெப்சைட்டில் உள்ள பொருட்களை கிளிக் செய்யும் பொழுது அவர் Flipkart, Amazon மற்றும் Snapdeal ஆகிய இணையதளங்களில் உள்ள அந்தந்த பொருட்களின் பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவார். இப்பொழுது பார்வையாளர்கள் (visitor) அந்த பொருட்களை வாங்கும் பொழுது நீங்கள் உங்களுடைய வருமானத்தை உங்களுடைய affiliate account டிற்குள் login செய்து அறிந்து கொள்ள இயலும். பின்னர் உங்களுடைய வருமானத்தை உங்கள் வங்கி கணக்கில் பணமாகவோ அல்லது அந்தந்த நிறுவனங்கள் வழங்கும் Gift voucher களாகவோ பெறலாம்.
Thanks to http://onlinejobstraining.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக