வியாழன், 24 ஆகஸ்ட், 2017

அப்லியேட்(Affiliate) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ?



அப்லியேட் புரோகிராம் என்றால் என்னஇது எப்படி செயல்படுகிறதுஇதன் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பயன்படும் அடிப்படை தேவைகள் எவைஇதன் மூலம் எவ்வளவு வரை சம்பாதிக்க  முடியும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் கட்டுரையில் காண்போம். மேலும் பல வலைப்பதிவின் மூலம் ஆன்லைனில்  பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் பற்றிய தகவல்களை அறிய மேற்கண்ட கட்டுரையை படிக்கவும்.

அப்லியேட் புரோகிராம் என்றால் என்ன?


அப்லியேட் புரோகிராம் என்பது மற்ற நிறுவனத்தின் பொருட்களை அல்லது சேவைகளை கமிசன் தொகைக்காக ஊக்குவிக்கும் செயல்முறையாகும்.  இது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க  பயன்படுத்தப்படும் எளிய முறையாகும். 

குறிப்பு: எளிய முறை என்பது எந்த முயற்சியும் எடுக்கமால் அல்லது கடின உழைப்பு ஏதும் செய்யாமல்ஒரே நாளில் பணம் சம்பாதிப்பது அல்ல. எளிய முறை என்பது உங்களின் வலைப்பதிவில் 10000 வாடிக்கையாளர்கள் பார்வையிடும் போது இதை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எளிதாகும்.

நீங்கள் ஒரு வெற்றிகரமான வலைப்பதிவை செயல்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் எனில் உங்களின் வலைப்பதிவின் தலைப்புக்கு ஏற்ற மற்ற நிறுவனத்தின் பொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட வருமானம்  பெறுவது உறுதி. இதன் காரணமாகவே பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் அப்லியேட் புரோகிராமை தங்களின் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க பயன்படுத்துகின்றனர்.

எடுத்துகாட்டாக நீங்கள் LED TV Review செய்யும் வலைப்பதிவை செயல்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் எனக் கொள்வோம். பிரபலமான LED TV விற்கும் நிறுவனத்திடம் அப்லியேட் ஆக சேர்ந்த பின் உங்களின் வலைப்பதிவை பயன்படுத்தி குறிப்பிட்ட தொலைக்காட்சியை வாங்கும்போது உங்களின் கமிசன் தொகை உங்களுக்கு வழங்கப்படும். இந்த செயல்முறையே அப்லியேட் புரோகிராம் எனப்படும். 

அப்லியேட் புரோகிராம் எப்படி செயல்படுகிறது.


நீங்கள் ஒரு நிறுவனத்தில் அப்லியேட் ஆக சேர்ந்தபின் உங்களுக்கு ஒரு UNIQUE ID கொடுக்கப்படும்இந்த UNIQUE ID உங்களின் வலைப்பதிவில் Paste செய்ய வேண்டும். நீங்கள் Refer செய்யும் பொருட்களை வாங்க நினைப்பவர்கள் குறிப்பிட்ட இணையதளத்திற்கு திருப்பி அனுப்பபடுவார்கள். அவர்கள் வாங்கும் பொருளுக்கு கமிசன் வழங்கப்படும். உங்களின் இணையத்திலிருந்து வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் கமிசன் தொகை போன்றவை தனிப்பட்ட மென்பொருள் மூலம் UNIQUE ID பயன்படுத்தி  கணக்கு வைக்கப்படும். மாத முடிவில் உங்களின் கமிசன் தொகை உங்களுக்கு வழங்கப்படும். 

நீங்கள் கமிசன் தொகையை பெற எல்லா முறையும் கமிசன் பொருட்களை விற்க வேண்டிய அவசியம் இல்லை. அப்லியேட் புரோகிராம் பலவகைப்படும்அவற்றுள் சில 

Pay per Sale:  நீங்கள் ஒவ்வொரு முறை பொருட்களை விற்கும்போதும் கமிசன் தொகை வழங்கப்படும்.

Pay per Click: உங்களின் வலைப்பதிவில் இருந்து அனுப்பும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கமிசன் தொகை வழங்கப்படும். அவர்கள் பொருள் வாங்கினாலும் வாங்கவிட்டாலும் உங்களுக்கு குறிப்பிட்ட கமிசன் தொகை வழங்கப்படும்.

Pay per Leadஉங்களால் திருப்பி அனுப்பபட்ட வாடிக்கையாளர்கள்மற்ற இணையதளத்தில் தங்களின் தொடர்பு தகவல்களை பதிவு செய்யும் பட்சத்தில் கமிசன் தொகை வழங்கப்படும்.
 

ஏன் அப்லியேட் புரோகிராமில் இணைய வேண்டும்.


அப்லியேட் புரோகிராம் உலகில் உள்ள அனைத்து வலைப்பதிவாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாது குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டும் முறையாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் ஏன் இதை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்கான சில அடிப்படை காரணங்கள்:

உலகளாவிய சந்தை: இணையத்தில் பொருள் வாங்குவது இன்றைய அளவில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் பல கோடிக்கணக்கான பொருள்களில் உங்களுக்கு ஏற்ற பொருளை தேர்ந்தெடுத்து விற்பனை செய்யலாம்.

கட்டணம் இல்லைநீங்கள் அப்லியேட் புரோகிராமில் சேர எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

சேமிப்பு கிடங்கு மற்றும் பட்டுவாடாநீங்கள் பொருட்களை சேமித்து வைத்தல் மற்றும் அதை பட்டுவாடா செய்யும் முறை இப்படி எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். விற்பனையாளர் இவை அனைத்தையும் கவனித்து கொள்வார்.

தொடர்ச்சியான வருமானம்: அப்லியேட் புரோகிராம் மூலம் மாத மாதம்  நீங்கள் குறிப்பிட்ட வருமானத்தை பெறலாம். உங்களின் விற்பனை திறனை பொருத்துஅதிகம் சம்பாதிக்கலாம்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்மேலும் அப்லியேட் புரோகிராம் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்நீங்களே உங்களுக்கு முதலாளி ஆவீர்கள்.

அப்லியேட் புரோகிராமில் வெற்றியடைய சில அடிப்படை நுணுக்கங்கள்


அப்லியேட் புரோகிராம் பற்றி தெரிந்துகொண்ட பின் ஒரே இரவில் அப்லியேட் புரோகிராம் பயன்படுத்தி செல்வந்தர் ஆகிவிடலாம் என எண்ண வேண்டாம். அப்லியேட் புரோகிராம் எளிதில்ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் முறை என்றாலும் அதிக போட்டிகளை கொண்டது ஆகும். இதில் நீங்கள் வெற்றியடைய எந்த பொருள் அதிகம் விற்கும்அதற்கு செய்யவேண்டிய வேலைகள்குறிப்பிட்ட பொருளை ஊக்குவிக்கும் முறைகள் போன்றவற்றை ஆய்வு செய்யவேண்டும். அப்லியேட் புரோகிராமில் வெற்றியடைய கீழ்கண்ட நுணுக்கங்களை பயன்படுத்துங்கள்.

சில பொருள்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்:

 பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் செய்யும் தவறு அதிக பொருட்களை தேர்ந்தெடுத்து கமிசன் தொகையை மட்டும் குறியாக கொண்டு அனைத்தையும் ஊக்குவித்தல். உங்களின் வலைப்பதிவின் தலைப்பிற்கு ஏற்ற சில பொருட்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்அவற்றை அழகாக வரிசைப்படுத்தி ஊக்குவிங்கள்.

அதிக வாடிக்கையாளர்களை கவருங்கள்


சில வலைப்பதிவாளர்கள் பொருள்களை தங்களின் வலைப்பதிவில் ஊக்குவிப்பதன் உடன் விட்டுவிடுகிறார்கள். அதிக வாடிக்கையாளர்களை கவர Google Adwords போன்ற மற்ற ஆதாரங்களை பயன்படுத்துங்கள். இதை செய்வதன் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பொருளை பார்க்க நேரும்அதே போல் விற்பனையும் அதிகரிக்கும்.

பொருளின் பற்றாக்குறையை ஆய்வு செய்யுங்கள்

அதிக் பற்றாக்குறை உள்ள பொருட்கள் அதிகம் விற்பனையாகும். எனவே அதிக பற்றாக்குறையான பொருட்கள் எவை என ஆய்வு செய்யுங்கள்அவற்றை எடுத்து ஊக்குவிங்கள். இது அதிக அளவு பொருட்களை விற்பனை செய்ய உதவும்.

சரியான விற்பனையாளரை தேர்ந்தெடுங்கள்

சரியான பொருளை தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லதுசரியான விற்பனையாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். விற்பனையாளரின் குறைபாடுகள் உங்களின் விற்பனையை பாதிக்கலாம். நீண்ட காலமாக பொருள்களை விற்கும் மேலும் தரமான பொருட்கை விற்கும் நிறுவனம் அல்லது விற்பனையாளரை தேர்ந்தெடுங்கள்.

மேற்கண்ட அனைத்தயும் சரியாக செய்யுங்கள்பொறுமையுடன் காத்திருங்கள் உங்களின் விற்பனை அதிகரிக்கும். விடா முயற்சி மற்றும் அயராத உழைப்பு மட்டுமே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக