சனி, 27 டிசம்பர், 2025

YouTube-ல் பணம் சம்பாதிப்பது எப்படி? (2026 முழு வழிகாட்டி – தமிழில்)

 இன்றைய காலத்தில் YouTube என்பது ஒரு பெரிய வருமான வாய்ப்பு.

Mobile + Internet இருந்தால் போதும், நீங்கள் கூட YouTuber ஆகி மாதம் ₹10,000 முதல் ₹1,00,000+ வரை சம்பாதிக்க முடியும்.

இந்த ப்ளாகில், YouTube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதை எளிய தமிழில் பார்க்கலாம் 👇


✅ 1. சரியான Channel Niche தேர்வு செய்யுங்கள்

YouTube-ல் வெற்றி பெற முக்கியமான விஷயம் Niche (துறை).

🔹 Popular Niche Ideas (தமிழில்)

Tech Reviews (Mobile, Gadgets)

Cooking / Home Recipes

Vlogs (Daily Life, Family, Travel)

Education (Coding, Exam Tips)

Kids Content

Motivation & Self Improvement

Finance / Investment (Basic Level)

👉 Tip: நீங்கள் ஆர்வமாக செய்யக்கூடிய விஷயத்தை தேர்வு செய்யுங்கள்.


✅ 2. YouTube Channel தொடங்குவது எப்படி?

Gmail account உருவாக்குங்கள்

YouTube → Create Channel

Channel Name & Logo சேர்க்கவும்

About Section சரியாக எழுதுங்கள் (Keywords முக்கியம்)


✅ 3. Monetization பெற என்ன தேவை?

YouTube-ல் பணம் சம்பாதிக்க YouTube Partner Program-ல் சேர வேண்டும்.

📌 Eligibility:

✔️ 1000 Subscribers

✔️ 4000 Watch Hours (or) 10M Shorts Views (90 days)

✔️ No Copyright Issues

Monetization Enable ஆனதும் Ads மூலம் பணம் வரும் 💰


✅ 4. YouTube-ல் வருமானம் கிடைக்கும் வழிகள்

🔥 1. Google AdSense

வீடியோவில் Ads

Views அதிகமானால் Income அதிகம்

🔥 2. Affiliate Marketing

Amazon / Flipkart Links

Product Review வீடியோக்களுக்கு Best

🔥 3. Brand Promotions

Subscriber Count அதிகமானால் Brands Contact செய்வார்கள்

🔥 4. Own Products / Courses

Online Course

Digital Products

Consulting


✅ 5. Views & Subscribers அதிகரிக்க Tips

📈 SEO Tricks:

Attractive Thumbnail

Clickable Title

Proper Description & Tags

Tamil + English Mix Keywords

📌 Example Title:

"₹50,000 சம்பாதிக்க YouTube எப்படி பயன்படுத்துவது?"


✅ 6. Consistency தான் Success Secret

வாரம் குறைந்தது 2–3 Videos

ஒரே Timing-ல் Upload

Audience Comments-க்கு Reply செய்யுங்கள்

🚀 Beginners-க்கு முக்கிய Advice

❌ Camera இல்லையா? – Mobile போதும்

❌ Perfect Video வேண்டாம் – Start பண்ணுங்கள்

❌ Slow Growth? – Patience முக்கியம்

👉 Start Early, Learn Daily, Grow Slowly


✨ முடிவு

YouTube என்பது ஒரு Long-term Income Source.

இன்றே தொடங்கினால், நாளை நல்ல வருமானம் கண்டிப்பாக கிடைக்கும்.

👉 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், Share & Comment செய்யுங்கள் 🙏

வெள்ளி, 17 ஜூலை, 2020

5000 ரூபாய்க்குக் கீழே வலைத்தளத்தைத் தொடங்க விரும்புகிறீர்களா?

குறைந்தபட்ச பணத்துடன் உங்கள் வணிகத்தை ஆன்லைனில் தொடங்க விரும்புகிறீர்களா? 5000 ரூபாய்க்குக் கீழே வலைத்தளத்தைத் தொடங்க விரும்புகிறீர்களா?

இந்தியாவில் நீங்கள் ஆன்லைனில் உங்கள் வணிகத்தை உருவாக்க விரும்பினால், நீங்கள் சொந்த வணிக வலைத்தளத்தைத் தொடங்க வேண்டும், ஒரு வலைத்தளத்தைத் தொடங்க கீழே உள்ள வலைத்தள இணைப்பைக் கிளிக் செய்க. WIBOW TECHNOLOGY .

5000 ரூபாயிலிருந்து WIBOW TECHNOLOGY அவர்கள் வலைத்தளத்தை உருவாக்குகிறார்கள். சிறு வணிக வலைத்தளங்கள், இணையவழி வலைத்தளம், தனிப்பட்ட வலைத்தளம், சமூக வலைத்தளம், மொபைல் பயன்பாடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல், எஸ்சிஓ சந்தைப்படுத்தல், லோகோ வடிவமைப்பு, டிஜிட்டல் பேனர் வடிவமைப்பு, சமூக ஊடக அட்டைப் படம், விளம்பரம்.

சேவைகள்:






செவ்வாய், 8 மே, 2018

நாட்டுக் கோழி வளர்ப்பு



Naatu Kolil Valarpu
Nattu Koli
Kari Koli Valarpu
Kari Koli Valarpu





தமிழகம் எங்கும் தாரமான நாடுகோழி குஞ்சுகள் தேவைக்கு தொடர்பு கொள்ளவும் .
 9952831890



Nattu Koli Valarpu Nattu kozhi valarpu Seval Sandai - நாட்டுக்கோழி வளர்ப்பு சேவல்

பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சேவக்கட்டு (சேவல் சண்டை) எனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும். சேவல் சண்டை, பொங்கல் சமயம் மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காக சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத் தேவை இருப்பதால், சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு.
பெரும்பாலும், சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வு செய்வார்கள். இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம். அசில் போலவே பெருத்து வளரக்கூடிய இன்னொரு இனம்... 'சிட்டகாங்’ எனும் நாட்டுரகச் சேவல். இந்த இரண்டு இனங்களையும் கலப்புசெய்து, பெருவட்டு இனக் கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார், திண்டுக்கல் மாவட்டம், காப்பிளியப்பட்டி, பாலமுருகன்.
கட்டுமானத்தொழிலில் இருந்து கால்நடை வளர்ப்புக்கு!
காலை வேளையொன்றில்... கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாலமுருகனைச் சந்தித்தோம்.
''எங்களுக்கு ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம்தான் குடும்பத்தொழில். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, கோயம்புத்தூர்ல பத்து வருஷம் வேலை பாத்தேன். குடும்பத்தை விட்டு பிரிஞ்சே இருந்ததால, குடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன். விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்னு மூணு வருஷத்துக்கு முன்ன ஊருக்கு வந்துட்டேன். எங்க தோட்டத்துல தண்ணி வசதி இல்லாததால, தென்னம்பட்டியில இருக்கற இந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன். கோ.எஃப்.எஸ்-29 தீவனச்சோளம், கோ-4 மாதிரியான பசுந்தீவனப் பயிர்களை விதைச்சு... 16 கலப்பின பால் மாடுகளை வாங்கி, பால் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 250 லிட்டர் பால் கிடைச்சுட்டு இருந்தது. ஆனா, கொஞ்ச நாள்லயே கிணத்துல தண்ணி வத்திடுச்சு. அதனால, தீவனம் உற்பத்தி பண்ண முடியாததால... பத்து மாடுகளை வித்துட்டேன். இப்போ ஆறு மாடு மட்டும் கையில இருக்கு. மாடுகளுக்கு போட்ட ஷெட்டுல, கோழிகளை வளர்க்க லாம்னு தோணுச்சு. அதனால ஒன்றரை வருஷமா கோழிகளை வளர்த்திட்டிருக்கேன்'' என்று  முன்னுரை கொடுத்த பாலமுருகன், தொடர்ந்தார்.
  
நாட்டுக்கோழிக்குத் தேவை அதிகம்!
''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்’னு பலரும் ஆலோசனை சொன்னாங்க. நான், நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள்ல எந்தக் கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்குனு பார்த்து, அதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி... சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அப்போ, நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், பெருவட்டு சேவல்களையும், கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப் பாத்தேன். குறிப்பா, அசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. விலையும் நல்லா கிடைக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். நாமக்கல் கே.வி.கே-யிலயும் விசாரிச்சுட்டு அசில், சிட்டகாங் வகைக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.
பெரும்பாலும், அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்க. அதனால, இதுக்கு நல்ல தேவை இருக்கு. நான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி, சேவல்கள் நல்ல பெருவெட்டா வருது. இப்போ, கையில அசில், சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து 10 சேவல்கள், 100 கோழிகள்,
100 குஞ்சுகள் வெச்சுருக்கேன். நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்து கிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்கு. இது, பழங்குடி மக்கள் வளர்க்கற ரக கோழி. இதோட கறி, கருப்பு நிறத்துலதான் இருக்கும். ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த கறி. இந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன், கடக்நாத் கோழிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்.
வளர்ப்புக்கு மட்டும் விற்பனை!
''அசில், சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம் செஞ்சுக்கும். ஆனா, கடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும். அதனால, இனம் கலக்குறதுக்கு வாய்ப்பில்லை. சராசரியா, இப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. அதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன். ஊளை முட்டைகள் போக, மாசத்துக்கு சராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுது. நான் குஞ்சுகளா விக்கிறதில்லை. அம்பது, அம்பத்தஞ்சு நாள் வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன். அதேமாதிரி, கறிக்காகவும் விக்கிறதில்லை. வளர்ப்புக்காக தாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன். சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும் வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன், பராமரிப்பு முறைகளை விளக்கினார்.
''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன். சுத்தி கம்பி வலை இருக்கு. கோழிகளுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன். ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன். இந்த கேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம். தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும். தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம். நாட்டுக்கோழிக்குனு பிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குது. அதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.

ஒவ்வொரு செட்டா இன்குபேட்டர்ல வெச்சு பொரிப்போம். இதுக்காவே தனியா இன்குபேட்டர் ரூம் இருக்கு. இன்குபேட்டர் மூலமா 21 நாள்ல குஞ்சு பொரிஞ்சுடும். அப்பறம் சுத்தப்படுத்திட்டு, அடுத்த செட் முட்டைகளை வெச்சுடுவோம். குஞ்சு பொரிச்சவுடனே ஈரம் காயுற வரைக்கும் இன்கு பேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். அதுக்கப்பறம், அதை புரூடருக்கு மாத்துவோம். தரையில் தவிட்டைப் பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா அட்டை, பாய் இல்லனா தகரத்தை சுத்தி வெச்சு... இதுல வெப்பத்துக்காக பல்புகளை எரிய விடணும். இதுதான் புரூடர். கூண்டுக்குள்ளகூட இந்த மாதிரி வசதியைப் பண்ணிக்கலாம். இப்போ கரன்ட் அடிக்கடி கட் ஆகறதால, மண் பானைக்குள்ள மூட்டம் போட்டு வெச்சுடுறோம். இது குஞ்சுகளுக்கு கதகதப்பா இருக்கும்.

குஞ்சுகள் பொரிஞ்சு வந்த முதல் நாள், குளுக்கோஸ் தண்ணி மட்டும் கொடுப்போம். ரெண்டாவது, மூணாவது நாள்ல அரைச்ச மக்காச்சோளம் கொடுப்போம். அதுக்கப்பறம், கம்பெனி தீவனம் கொடுக்குறோம். ஒரு மாசம் கழிச்சு குஞ்சுகள கொட்டகைக்கு மாத்திடுவோம். அம்மை, கழிசல் நோய்களுக்கான மருந்துகளை... பிறந்ததுல இருந்து ஏழாம் நாள், பதினஞ்சாம் நாள், இருபத்தோராம் நாள், முப்பத்தஞ்சாம் நாள், அம்பத்தஞ்சாம் நாள்னு முறையா கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் மாசத்துக்கு ஒரு தடவை மருந்து கொடுப்போம். இதெல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டிய மருந்து'' என்று பராமரிப்பு முறைகளை விளக்கிய பாலமுருகன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஜோடி 1,500 ரூபாய்!
''நல்லா செழிம்பா தீவனம் கொடுத்து வளர்க்கறதால கோழிகள் மூணு மாசத் துலேயே ரெண்டு கிலோ வரைக்கும் எடை வந்துடும். அம்பது, அம்பத்தஞ்சு நாள் வளர்த்துதான் விற்பனை செய்றேன். வளர்ப்புக்கு மட்டுமே கொடுக்கறதால ஒரு ஜோடி 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன். மாசத்துக்கு 50 ஜோடி வரைக்கும் விற்பனை செய்றேன். வீட்டுத்தேவைக்கும், ரொம்ப நெருங்கின நண்பர்களுக்கும்தான் கறிக்காக கோழியை எடுத்துக்குவோம். இதெல்லாம் போக மீதியை பண்ணையிலயே வளர்த்துடுவோம். மூக்கு வளைஞ்சு, கிளி மூக்கு மாதிரி இருக்கற சேவல்களை சண்டைக்குப் பழக்க வாங்குவாங்க. இதுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு எல்லாம் போக நாட்டுக்கோழி மூலமா மாசத்துக்கு சராசரியா அம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார் பாலமுருகன்.

நல்வழி காட்டும் நாட்டுக்கோழி வளர்ப்பு...
கோழிக்குஞ்சு உற்பத்தி மூலமே குதூகல வருமானம்...
கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: கே. குணசீலன்
 கால்நடை
''நாட்டுக்கோழியை, மேயவிட்டுத்தான் வளக்கணும். பிராய்லர் கோழி மாதிரி கொட்டகைக்குள்ள அடைச்சு வெச்சு கம்பெனி தீவனத்தைக் கொடுத்தா... அதை நாட்டுக்கோழினு சொல்ல முடியாது. 'நாட்டு பிராய்லர் கோழி'னு வேணும்னா சொல்லிக்கலாம். அதேசமயம்... மேய்ச்சல் முறையில அதிகளவு கோழிகளைப் பராமரிக்க முடியாதுங்கறதும் உண்மை. அதனால... அடைப்புடன் கூடிய நடமாடும் முறையில (கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறை) வளர்க்கும்போது, நாட்டுக்கோழிகளைத் தரம் குறையாமலும் ஆரோக்கியமாவும் வளர்க்க முடியுது'' என்று உற்சாகமாக தன் அனுபவத்தைச் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி.



கோழிகளுக்குத் தீவனம் போட்டபடியே நம்மிடம் பேச்சைத் தொடர்ந்த துரைசாமி... ''நான் 5 ஏக்கர்ல நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அதோட கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில ஆடுகளை வளர்க்கலாம்னு வலை வேலியோட கொட்டகை அமைச்சேன். ஆனா, ஆடு வளர்ப்பு எனக்கு சரிப்பட்டு வரல. அதனால, அதை விட்டுட்டேன். சும்மா கிடக்குற கொட்டகையில உருப்படியா ஏதாவது செய்யலாமேனு யோசிப்ப கிடைச்சதுதான்... கோழி வளர்ப்பு!
ஆட்டுக்கொட்டகையில் தோன்றிய யோசனை !
நாமக்கல்ல இருக்கற நாட்டுக்கோழிப் பண்ணையில, ஒரு குஞ்சு 35 ரூபாய்னு ஒரு நாள் வயசுள்ள 200 கோழிக்குஞ்சுகள வாங்கிக்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். என்கிட்ட இருந்த கொட்டகையில 100 கோழிகளத்தான் வளர்க்க முடியும். அதனால மூணு மாசத்துல குஞ்சுகள் கொஞ்சம் பெருசானதும் 90 பெட்டை, 10 சேவல்களை மட்டும் வெச்சுக்கிட்டு மிச்சத்தை வித்துட்டேன். குஞ்சுகளை வாங்கிட்டுப் போனவங்க அடிக்கடி வந்து, 'கோழிக்குஞ்சு வேணும்’னு கேட்டாங்க. அப்போதான் குஞ்சுகளுக்கு நிறைய தேவை இருக்குதுனு புரிஞ்சுச்சு. அதுக்கப்பறம் கோழிக்குஞ்சு உற்பத்தியில தீவிரமா இறங்கிட்டேன்.
வாரத்துக்கு 75 குஞ்சுகள் !
பொதுவா, அஞ்சாறு மாச வயசுக்கு மேல ஒண்ணொண்ணா முட்டை போட ஆரம்பிச்சு... 9-ம் மாசத்துல இருந்து முட்டைகள் அதிகளவுல கிடைக்க ஆரம்பிச்சுது. முட்டைகளை இன்குபேட்டர் மூலமா பொரிச்சு விற்பனை பண்றேன். முட்டைகளைத் தனியா விக்கறதில்லை. வாரத்துக்கு அம்பதுல இருந்து 100 குஞ்சுகள் வரைக்கும் உற்பத்தியாகும். ஏதாவது காரணத்தால இறந்தது போக, சராசரியா வாரத்துக்கு 75 குஞ்சுகள வித்துக்கிட்டிருக்கேன்.
மூணு வயசானதுக்கப்பறம் முட்டை உற்பத்தி குறைஞ்சுடும். அதனால மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தாய்க்கோழிகளை மாத்திடணும். என்கிட்ட உற்பத்தியாகுற குஞ்சுகளையே தனியா வளர்த்து, தாய்க்கோழிகளா  வெச்சுக்குவேன்'' என்ற துரைசாமி, தீவன மேலாண்மை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
செலவைக் குறைக்கும் பசுந்தீவனம் !
ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு   120 கிராம்ங்கிற கணக்குல, 100 கோழிகளுக்கும் சேர்த்து தினமும் 12 கிலோ அடர்தீவனம் தேவைப்படும். நான் பசுந்தீவனத்தை அதிகமா கொடுத்து, அடர்தீவனச் செலவைக் குறைச்சுக்கிறேன். 100 கோழிகளுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 4 கிலோ அடர்தீவனம்தான் கொடுக்கிறேன். எருமைப்புல், கிளரிசீடியா, வாதமடக்கி, முள்முருங்கை, அசோலா, குதிரைவாலினு கிடைக்கற தீவனங்கள 15 கிலோ அளவுக்கு கொடுக்கிறேன்.
அதுவுமில்லாம அடர்தீவனத்துக்காகவும் நான் அதிகமா செலவழிக்கறதில்ல. 3 கிலோ சோள மாவு, 800 கிராம் நொய் குருணை, 100 கிராம் கம்பு, 100 கிராம் கேழ்வரகு இதை மட்டும் வெச்சு 4 கிலோ தீவனம் தயாரிச்சுடுவேன். இதுக்கு 60 ரூபாய்தான் செலவாகுது.
காய்கறி கடைகள்ல இலவசமா கிடைக்கக்கூடிய கழிவுகளையும் அப்பப்போ எடுத்துட்டு வந்து கோழிகளுக்கு கொடுக்கிறேன். இதையெல்லாம் கோழிகள் விரும்பி சாப்பிடறதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிச்சு, ஆரோக்கியமா இருக்கு. பெருசா நோய்களும் வர்றதில்லை.
பேன்களைத் துரத்தும் மண்குளியல் !
நாட்டுக்கோழிகளுக்கு இயற்கையாகவே மண் குளியல் செய்யுற பழக்கம் உண்டு. றெக்கையை விரிச்சு வெயில்ல காய வெச்சு மண்ணுல போட்டு அடிச்சுக்குறதால தேவையில்லாத ரோமங்கள், பேன்கள்லாம் தானாவே உதிர்ந்துடும். கொட்டில்ல அடைச்சு வெச்சா... மண்குளியலுக்கு வாய்ப்பில்லாமப் போயிடும். கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில கோழிகளுக்கு சுதந்திரமா மேயுற உணர்வும் இருக்கறதால, இயற்கையாவே கோழிகள் ஆரோக்கியமா வளருது. இந்த முறையில எச்சங்களால பரவுற நோய்கள் இந்த முறையில் குறைவா இருக்கு.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா... கொட்டில்ல அடைச்சு வெக்கிறப்போ கோழிகளுக்குள்ள சண்டை வந்து  ஒண்ணை ஒண்ணு கொத்திக்கும். அதுக்காக அலகை வெட்டி விடுவாங்க. ஆனா, கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில இந்தப் பிரச்னை இருக்கறதில்ல. கோழிகளுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா, பறந்து போய் தப்பிச்சுக்கும். நாட்டுக்கோழிகளோட அலகை வெட்டிவிட்டா, அதுக்கு சந்தையில விலை கிடைக்காதுங்கறதையும் மனசுல வெச்சுக்கணும்'' என்ற துரைசாமி நிறைவாக,
''நான் உற்பத்தி பண்ற குஞ்சுகள பெரும்பாலும் ஒரு நாள் வயசுலயே வித்துடுவேன். ஒரு குஞ்சு 35 ரூபாய்னு வாரத்துக்கு 75 குஞ்சுகள் மூலமா 2,625 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தீவனச்செலவு, பராமரிப்பு எல்லாம் போக வாரத்துக்கு 2,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. நானே பராமரிச்சுக்குறதால பெரிய அளவுல செலவில்லை. அதனால விவசாயத்தோட சேர்த்து நான் மட்டுமே பாத்துக்குற அளவுக்கு 100 கோழிகளை மட்டும் வெச்சுக்கிட்டிருக்கேன்'' என்றார், உற்சாகமாக.

 இப்படித்தான் வளர்க்கணும்
 கொட்டகையின் நீளம் 20 அடி. அகலம் 10 அடி. தரையில் இருந்து 2 அடி உயரத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேல், 3 அடி உயரத்துக்கு கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை, கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ளது. கொட்டகையின் முன்பகுதியில் 40 அடி நீளம், 10 அடி அகலம், 5 அடி உயரத்துக்கு மூன்று புறமும் கம்பிவேலி அமைக்கப்பட்டு, அதன் மீது நைலானாலான மீன் வலை அமைக்கப்பட்டுள்ளது. 100 நாட்டுக்கோழிகளை வளர்க்க, இந்த அளவு போதுமானது.
கோழிகளால் இங்கு தாராளமாக நடமாட முடியும். தேவையான வெயில் கிடைக்கும். அதேசமயம் வெளியேற முடியாது. நிழல் தேவை என்றால், கொட்டகைக்குள் வந்து அடைந்து கொள்ளும். தினமும் காலை 6 மணிக்கு கொட்டகையைத் திறந்து விட்டு, மாலை 6 மணிக்கு கொட்டகைக்குள் கோழிகளை அடைத்து விடலாம். வெளிப்பகுதியில் வேலி அமைக்கப்பட்டுள்ளதால் பாம்பு, காட்டுப்பூனை போன்ற ஜீவராசிகளால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இதை அமைக்க 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
4 மாதம் வரை குஞ்சுத்தீவனம் !    
 பொரித்ததில் இருந்து 15 நாட்கள் வரை ஒரு கோழிக்குஞ்சுக்கு தினமும் சுமார் 5 கிராம் வரை குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். அடுத்த15 நாட்களுக்கு தினமும் 10 கிராம் அளவுக்கு குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு மாத வயதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 4-ம் மாதத்திலிருந்து வளர்ந்த கோழிகளுக்கான தீவனத்தை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது நாமே தயாரித்துக் கொடுக்கலாம்.
கோழிகள் முட்டையிட்ட உடனே, ஒரு மண்பானையில் உமியைப் பரப்பி முட்டைகளை வைத்து ஈரத்துணியால் முடி வைக்க வேண்டும். முட்டைகள் சேர்ந்த பிறகு இன்குபேட்டரில் வைத்துப் பொரிக்க வேண்டும்.
21 நாளில் குஞ்சுகள் பொரித்துவிடும். பிறந்த குஞ்சுகளை சுமார் ஒன்றரையடி உயரம், 4 அடி விட்டத்துக்கு வட்ட வடிவில் அட்டைகளை வைத்து ப்ரூடர் (செயற்கை வெப்பம் ஏற்படுத்தும் விளக்கு) அமைத்து, அதற்குள் விட வேண்டும். ஒரு மாதம் வரை குஞ்சுகளுக்கு பல்பு மூலம் வெப்பம் கொடுக்க வேண்டும்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

அப்லியேட்(Affiliate) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ?



அப்லியேட் புரோகிராம் என்றால் என்னஇது எப்படி செயல்படுகிறதுஇதன் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பயன்படும் அடிப்படை தேவைகள் எவைஇதன் மூலம் எவ்வளவு வரை சம்பாதிக்க  முடியும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் கட்டுரையில் காண்போம். மேலும் பல வலைப்பதிவின் மூலம் ஆன்லைனில்  பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் பற்றிய தகவல்களை அறிய மேற்கண்ட கட்டுரையை படிக்கவும்.

அப்லியேட் புரோகிராம் என்றால் என்ன?


அப்லியேட் புரோகிராம் என்பது மற்ற நிறுவனத்தின் பொருட்களை அல்லது சேவைகளை கமிசன் தொகைக்காக ஊக்குவிக்கும் செயல்முறையாகும்.  இது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க  பயன்படுத்தப்படும் எளிய முறையாகும். 

குறிப்பு: எளிய முறை என்பது எந்த முயற்சியும் எடுக்கமால் அல்லது கடின உழைப்பு ஏதும் செய்யாமல்ஒரே நாளில் பணம் சம்பாதிப்பது அல்ல. எளிய முறை என்பது உங்களின் வலைப்பதிவில் 10000 வாடிக்கையாளர்கள் பார்வையிடும் போது இதை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எளிதாகும்.

நீங்கள் ஒரு வெற்றிகரமான வலைப்பதிவை செயல்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் எனில் உங்களின் வலைப்பதிவின் தலைப்புக்கு ஏற்ற மற்ற நிறுவனத்தின் பொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட வருமானம்  பெறுவது உறுதி. இதன் காரணமாகவே பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் அப்லியேட் புரோகிராமை தங்களின் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க பயன்படுத்துகின்றனர்.

எடுத்துகாட்டாக நீங்கள் LED TV Review செய்யும் வலைப்பதிவை செயல்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் எனக் கொள்வோம். பிரபலமான LED TV விற்கும் நிறுவனத்திடம் அப்லியேட் ஆக சேர்ந்த பின் உங்களின் வலைப்பதிவை பயன்படுத்தி குறிப்பிட்ட தொலைக்காட்சியை வாங்கும்போது உங்களின் கமிசன் தொகை உங்களுக்கு வழங்கப்படும். இந்த செயல்முறையே அப்லியேட் புரோகிராம் எனப்படும். 

அப்லியேட் புரோகிராம் எப்படி செயல்படுகிறது.


நீங்கள் ஒரு நிறுவனத்தில் அப்லியேட் ஆக சேர்ந்தபின் உங்களுக்கு ஒரு UNIQUE ID கொடுக்கப்படும்இந்த UNIQUE ID உங்களின் வலைப்பதிவில் Paste செய்ய வேண்டும். நீங்கள் Refer செய்யும் பொருட்களை வாங்க நினைப்பவர்கள் குறிப்பிட்ட இணையதளத்திற்கு திருப்பி அனுப்பபடுவார்கள். அவர்கள் வாங்கும் பொருளுக்கு கமிசன் வழங்கப்படும். உங்களின் இணையத்திலிருந்து வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் கமிசன் தொகை போன்றவை தனிப்பட்ட மென்பொருள் மூலம் UNIQUE ID பயன்படுத்தி  கணக்கு வைக்கப்படும். மாத முடிவில் உங்களின் கமிசன் தொகை உங்களுக்கு வழங்கப்படும். 

நீங்கள் கமிசன் தொகையை பெற எல்லா முறையும் கமிசன் பொருட்களை விற்க வேண்டிய அவசியம் இல்லை. அப்லியேட் புரோகிராம் பலவகைப்படும்அவற்றுள் சில 

Pay per Sale:  நீங்கள் ஒவ்வொரு முறை பொருட்களை விற்கும்போதும் கமிசன் தொகை வழங்கப்படும்.

Pay per Click: உங்களின் வலைப்பதிவில் இருந்து அனுப்பும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கமிசன் தொகை வழங்கப்படும். அவர்கள் பொருள் வாங்கினாலும் வாங்கவிட்டாலும் உங்களுக்கு குறிப்பிட்ட கமிசன் தொகை வழங்கப்படும்.

Pay per Leadஉங்களால் திருப்பி அனுப்பபட்ட வாடிக்கையாளர்கள்மற்ற இணையதளத்தில் தங்களின் தொடர்பு தகவல்களை பதிவு செய்யும் பட்சத்தில் கமிசன் தொகை வழங்கப்படும்.
 

ஏன் அப்லியேட் புரோகிராமில் இணைய வேண்டும்.


அப்லியேட் புரோகிராம் உலகில் உள்ள அனைத்து வலைப்பதிவாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாது குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டும் முறையாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் ஏன் இதை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்கான சில அடிப்படை காரணங்கள்:

உலகளாவிய சந்தை: இணையத்தில் பொருள் வாங்குவது இன்றைய அளவில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் பல கோடிக்கணக்கான பொருள்களில் உங்களுக்கு ஏற்ற பொருளை தேர்ந்தெடுத்து விற்பனை செய்யலாம்.

கட்டணம் இல்லைநீங்கள் அப்லியேட் புரோகிராமில் சேர எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

சேமிப்பு கிடங்கு மற்றும் பட்டுவாடாநீங்கள் பொருட்களை சேமித்து வைத்தல் மற்றும் அதை பட்டுவாடா செய்யும் முறை இப்படி எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். விற்பனையாளர் இவை அனைத்தையும் கவனித்து கொள்வார்.

தொடர்ச்சியான வருமானம்: அப்லியேட் புரோகிராம் மூலம் மாத மாதம்  நீங்கள் குறிப்பிட்ட வருமானத்தை பெறலாம். உங்களின் விற்பனை திறனை பொருத்துஅதிகம் சம்பாதிக்கலாம்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்மேலும் அப்லியேட் புரோகிராம் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்நீங்களே உங்களுக்கு முதலாளி ஆவீர்கள்.

அப்லியேட் புரோகிராமில் வெற்றியடைய சில அடிப்படை நுணுக்கங்கள்


அப்லியேட் புரோகிராம் பற்றி தெரிந்துகொண்ட பின் ஒரே இரவில் அப்லியேட் புரோகிராம் பயன்படுத்தி செல்வந்தர் ஆகிவிடலாம் என எண்ண வேண்டாம். அப்லியேட் புரோகிராம் எளிதில்ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் முறை என்றாலும் அதிக போட்டிகளை கொண்டது ஆகும். இதில் நீங்கள் வெற்றியடைய எந்த பொருள் அதிகம் விற்கும்அதற்கு செய்யவேண்டிய வேலைகள்குறிப்பிட்ட பொருளை ஊக்குவிக்கும் முறைகள் போன்றவற்றை ஆய்வு செய்யவேண்டும். அப்லியேட் புரோகிராமில் வெற்றியடைய கீழ்கண்ட நுணுக்கங்களை பயன்படுத்துங்கள்.

சில பொருள்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்:

 பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் செய்யும் தவறு அதிக பொருட்களை தேர்ந்தெடுத்து கமிசன் தொகையை மட்டும் குறியாக கொண்டு அனைத்தையும் ஊக்குவித்தல். உங்களின் வலைப்பதிவின் தலைப்பிற்கு ஏற்ற சில பொருட்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்அவற்றை அழகாக வரிசைப்படுத்தி ஊக்குவிங்கள்.

அதிக வாடிக்கையாளர்களை கவருங்கள்


சில வலைப்பதிவாளர்கள் பொருள்களை தங்களின் வலைப்பதிவில் ஊக்குவிப்பதன் உடன் விட்டுவிடுகிறார்கள். அதிக வாடிக்கையாளர்களை கவர Google Adwords போன்ற மற்ற ஆதாரங்களை பயன்படுத்துங்கள். இதை செய்வதன் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பொருளை பார்க்க நேரும்அதே போல் விற்பனையும் அதிகரிக்கும்.

பொருளின் பற்றாக்குறையை ஆய்வு செய்யுங்கள்

அதிக் பற்றாக்குறை உள்ள பொருட்கள் அதிகம் விற்பனையாகும். எனவே அதிக பற்றாக்குறையான பொருட்கள் எவை என ஆய்வு செய்யுங்கள்அவற்றை எடுத்து ஊக்குவிங்கள். இது அதிக அளவு பொருட்களை விற்பனை செய்ய உதவும்.

சரியான விற்பனையாளரை தேர்ந்தெடுங்கள்

சரியான பொருளை தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லதுசரியான விற்பனையாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். விற்பனையாளரின் குறைபாடுகள் உங்களின் விற்பனையை பாதிக்கலாம். நீண்ட காலமாக பொருள்களை விற்கும் மேலும் தரமான பொருட்கை விற்கும் நிறுவனம் அல்லது விற்பனையாளரை தேர்ந்தெடுங்கள்.

மேற்கண்ட அனைத்தயும் சரியாக செய்யுங்கள்பொறுமையுடன் காத்திருங்கள் உங்களின் விற்பனை அதிகரிக்கும். விடா முயற்சி மற்றும் அயராத உழைப்பு மட்டுமே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும்.

ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் மூலம் மாதம் 50000 சம்பாதிப்பது எப்படி ?

       


ந்தியாவில் உள்ள பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களான Flipkart, Amazon மற்றும்   Snapdeal ஆகிய மூன்றும் ஆன்லைனில் மிகப்பெரிய சம்பாதிக்கும் வாய்ப்பினை வழங்குகின்றன. ஆன்லைனில் சம்பாதிக்க நினைக்கும் பெரும்பாலனோற்கு இந்நிறுவனங்கள் வழங்கும் வருமான வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஆனால் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இந்த மூன்று நிறுவனங்களில் லட்சகணக்கில் சம்பாதித்து கொண்டு இருக்கின்றனர் .

இந்நிறுவனங்கள் வருமான வாய்ப்பினை வழங்குவதற்கான காரணங்கள்
Flipkart, Amazon மற்றும் Snapdeal ஆகிய மூன்று நிறுவனங்களும் அவர்களுடைய பொருட்களை விற்பனை செய்ய உதவி புரிபவர்களுக்கு அந்த பொருட்களின் விலையில் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்குகின்றன. உதாரணமாகFlipkart இணையத்தளத்தில் ருபாய் 20000 மதிப்புள்ள ஒரு மொபைல் போன் ஒன்றை உங்கள் மூலமாக ஒருவர் வாங்குவதாக கொள்வோம் ,இப்பொழுது Flipkart நிறுவனம் இந்த விற்பனை நடைபெற உதவிய உங்களுக்கு ருபாய்.1000 கமிஷனாக அளிக்கும். உங்கள் மூலமாக Amazon இணையதளத்தில் ருபாய்.20000 மதிப்புள்ள மொபைல் போன் ஒன்றை ஒருவர் வாங்கினால் உங்களுக்கு Rs.1200 கமிஷனாக கிடைக்கும் .
இந்நிறுவனங்கள் வழங்கும் வருமான வாய்ப்பினை பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
Flipkart ,Amazon மற்றும் Snapdeal வழங்கும் வருமான வாய்ப்பினை பெற நீங்கள் அந்தந்த இணையதளங்களில் ஒரு Affiliate partner ஆக இணைய வேண்டும். இந்நிறுவனங்களில் affiliate partner ஆக இணைய நீங்கள் உங்கள் பெயர் முகவரி,தொலைபேசி எண், PAN Card எண் மற்றும் வங்கி விபரங்களை அளிக்க வேண்டும் .பின்னர் நீங்கள் எந்த விதமான பொருட்களை விற்பனை செய்ய விரும்புகிறீர்கள் என தேர்வு செய்ய வேண்டும் .அதாவது எலெக்ட்ரானிக் பொருட்களையாமொபைல் போன்களையாஆடைகளையா அல்லது வீட்டு உபயோக பொருட்களையாஎன தேர்வு செய்ய வேண்டும் .
பின்னர் எந்த இணையதளங்கள் மூலம் அவர்களுடைய பொருட்களை நீங்கள் விற்பனை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் [குறிப்பு : Flipkart, Amazon மற்றும் Snapdeal ஆகிய நிறுவனங்கள் மூலம் நீங்கள் சம்பாதிக்க வேண்டுமானால் நீங்கள் சொந்தமாக ஒரு வெப்சைட் வைத்திருக்க வேண்டும் ]
Flipkart நிறுவனத்தின் affilaite பக்கத்திற்கு செல்ல இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.

Flipkart நிறுவனத்தின் கமிஷன் விபரங்களை அறிய இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.

Amazon நிறுவனத்தின் affiliate பக்கத்திற்கு செல்ல இந்த லின்க்கை கிளிக் செய்யவும் .

Amazon நிறுவனத்தின் கமிஷன் விபரங்களை அறிய இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.

Snapdeal நிறுவனத்தின் affiliate பக்கத்திற்கு செல்ல இந்த லின்க்கை கிளிக் செய்யவும் .

Snapdeal நிறுவனத்தின் கமிஷன் விபரங்களை அறிய இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.

பின்னர் உங்களுடைய Flipkart, Amazon மற்றும் Snapdeal ஆகிய இணையதளங்களின்affiliate account டிற்குள் login செய்து நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் அல்லதுpromote செய்ய விரும்பும் பொருட்களை தேர்வு செய்து உங்களுடைய வெப்சைட்டில் இட வேண்டும். உங்கள் வெப்சைட்டிற்கு வருகை தரும் பார்வையாளர் ( Visitor ) உங்கள் வெப்சைட்டில் உள்ள பொருட்களை கிளிக் செய்யும் பொழுது அவர் Flipkart, Amazon மற்றும் Snapdeal ஆகிய இணையதளங்களில் உள்ள அந்தந்த பொருட்களின் பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவார். இப்பொழுது பார்வையாளர்கள் (visitor) அந்த பொருட்களை வாங்கும் பொழுது நீங்கள் உங்களுடைய வருமானத்தை உங்களுடைய affiliate account டிற்குள் login செய்து அறிந்து கொள்ள இயலும். பின்னர் உங்களுடைய வருமானத்தை உங்கள் வங்கி கணக்கில் பணமாகவோ அல்லது அந்தந்த நிறுவனங்கள் வழங்கும் Gift voucher களாகவோ பெறலாம்.

இணையத்தில் பணம் சம்பாதிக்க வழிகள்



இணையத்தில் பலரும் பலநேரம் செலவிட்டாலும் சிலர் மட்டும் தான் அதில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் திறமையுடனும் இருக்கிறார்கள் . சிலர் முயன்றும் இணையத்தில் பணம் பெறுவது பெரிய விஷமாகவெ உள்ளது .
இன்று  நாம் பார்க்க போவது இணையத்தில் நம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்து அதன் மூலம் எப்படி பணம் ஈட்டுவது என்று பார்போம் .

#PTC தளங்கள் :

இணையத்தில் பலவகையான PTC தளங்கள் உள்ளது . அதில் அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களை பார்த்து கிளிக் செய்தாலே அதன் மூலம் வரும் வருமானத்தை பாதியாக பிரித்து தருவார்கள் . 

#ebay & amazon தயாரிப்புகளை விற்பதன் மூலம்..

இணையத்தில் அதிகாமாக பணம் ஈட்டுவதில் இந்த இரண்டு தளங்களும் இரண்டு , மற்றும் நான்காம் இடத்தில் உள்ள தளங்கள் இவை . மேலும் பல ஆன்லைன் வாடிக்கையாளர் கள் இதன் மூலம் பொருட்களை விற்று பணம் பெறுகின்றனர் . அமேசான் தளமானது 2011 கூகுள் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது .ஆனால் இந்த வருடம் சில டாலர்கள் முன்னிலை பெற்று கூகுள் முதலிடத்தை பெற்றது . ஒவ்வொரு வருடமும் கூகுள் மற்றும் அமேசான-க்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது . இந்த தளத்தின் உள்ள பொருட்களை விற்கலாம் வாங்கலாம் . ஆங்கில வலைப்பதிவுகள் எழுதினால் புத்தகங்கள் , ஆடைகள் , விதவிதமான காலணிகள் போன்ற பல பொருட்களை விற்கலாம் . புத்தகங்களுக்கு Review எழுதி அமேசான் மூலம் உங்கள் வலைப்பதிவின் வாடிக்கையாளர்களை வாங்க செய்யலாம் . இதே போல் புதிதாக வரும் ஆண்ட்ராய்டு ,ஐ-போன் ,ஐ-பேட் , டேப்லட் , லேப்டாப் டெஸ்க்டாப் கணிணி மற்றும் இதர device -களை வாங்க சொல்லலாம் .
உங்கள் பொருள்களையே விற்க வேண்டும் என்றாலும் விற்று பணம் பெறலாம் .

#லோகோ வடிவமைப்பதன் மூலம்

நீங்கள் ஒரு சிறந்த வடிவமைப்பாளராக இருந்தால் லோகோ Design செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம் . ஆன்லைன் வடிவமைக்கும் திறனை வளர்த்து கொண்டு இதை முயற்சிக்கலாம் .
இரண்டு தளங்கள் நீங்கள் வடிவமைக்கும் லோகோ -க்களுக்கு பணம் தருகிறது .

www.logobee.com : இந்த தளத்தில் உங்கள் லோகோ ஏற்று கொள்ளப் பட்டால் ஓரு லோகோ-வுக்கு  $50/Logo 
www.99designs.com : இந்த தளத்தில் உங்கள் லோகோ ஏற்று கொள்ளப் பட்டால் ஓரு லோகோ-வுக்கு $500/Logo.

#வீடியோ மூலம் .. 

நம்மிடமுள்ள  சிறந்த வீடியோ-க்களை இந்த தளத்தின் மூலம் பதிவு செய்து 
பணம் பெறலாம் . வீடியோ-க்கள் மூலம் பணம் ஈட்டுவதில் மிகவும் பிரபலமான தளம் . இந்த தளத்தில் 50$ வரை சேர்த்த பின் PayPal, BankWire Transfer And MoneyBooker போன்றவற்றின் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம் . இந்த தளத்தில் வீடியோ-வை பதிவேற்றி விட்டால் அதற்கென்று தனி முகவரி கொடுத்து விடுவார்கள் .அந்த முகவரியை பேஸ் புக் ,ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டு அந்த வீடியோ பக்ககாட்சிகளை அதிகரிப்பதன் மூலம் இந்த தளத்தில் பணம் ஈட்ட முடியும் . 

http://www.videofy.me/


Thanks to http://wesmob.blogspot.in